top of page
Search
Writer's pictureBalu

பட்டாம்பூச்சியை போல

உலராத ஈரக் கூந்தலைத் துவட்டிக்கொண்டே அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள் நிவேதா. தனித்துவ சிகையலங்காரம் எதுவும் செய்துகொள்ளாமல் லிப்ஸ்டிக் மட்டும் வைத்துக்கொண்டாள். கருப்பு பேன்டும், வெள்ளை சட்டையும் அவளைப் பிரத்யேக அலுவலக அழகியாக்கியது. வாசனைத் திரவியம் மற்றும் மாய்ஷரைசர் நறுமணமும், அவளது இயற்கை நறுமணமும் கலந்து ஏற்படக்கூடிய வாசம் அவளின் அருகில் நிற்கும் யாரையும் கிறங்க வைத்துவிடக்கூடியது. ஒரு நாளின் தொடக்கத்திற்கான தன்னம்பிக்கை வரவழைத்துக்கொள்ள அவளுக்கு இதுவே போதுமானது.

அவளுடைய கணவன் சுதர்ஷன் சமையலறையில் காலையுணவும் மதிய உணவும் சமைத்துக்கொண்டிருந்தான். சமையலில் கைதேர்ந்த அவன், மனைவிக்குச் சமைத்துப் போடுவதில் சலித்துக்கொண்டதே இல்லை. அதுவும் உணவில் கருவேப்பிலையும் கொத்தமல்லியையும் சேர்க்கும்போது அதனை ஒவ்வொன்றாகக் கிள்ளி தண்ணீரில் நனைத்துப் போடும் அழகை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. சமையலறையில் நுழையும் ஒவ்வொரு பொழுதிலும் விளையாட்டு வீரன் மைதானத்திற்குச் செல்வது போலவும், மேடை கலைஞன் அரங்கேறுவது போலவும் அந்த இடத்தைத் தன் வசமாக்கிக் கொள்வான்.

நிவேதா ட்ரெஸ்ஸிங் அறையிலிருந்து ஹாலுக்குச் சாப்பிட வந்தாள். அவள் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சுதர்ஷன் தேநீர் அருந்தினான்.


“உனக்கு லேட் ஆகலயாடா? எங்கேயோ போகனும்னு சொன்னியே! ப்ளேயா கான்ஸர்ட்டா?” என்றாள்.


“Art Exhibition. அவசரமில்ல. போய்க்கலாம்”


“நைட் எப்டி? டின்னர்க்கு வந்திடுவியா வெளிய சாப்ட்டுக்கவா?”


“தெரில. யாரையாவது மீட் பண்ணிட்டா லேட் ஆகிடும். நீ எதுக்கோ சாப்பிட்டு வந்திடு”


“ஒகே. சுதா, கிளம்புறதுக்கு முன்னாடி கொஞ்சம் அந்த புக் ஷெல்ஃப க்ளீன் பண்ணிடுறீயா? ப்ளீஸ் டா, செல்லம்ல? விட்டா ரொம்ப தூசி சேர்ந்திரும்”


இதுவரை ஒருமுறைகூட நிவேதாவின் கட்டளைகளுக்கு இணங்காமல் இல்லாத சுதர்ஷனிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்லிக் கெஞ்ச வேண்டிய அவசியமே அவளுக்கு இல்லையெனினும், அவனிடம் அப்படிக் கேட்பதில் ஒருவிதமான நெருக்கத்தை உணர்ந்தாள். அதற்கு அவன் ஒப்புக்கொள்ளும்போது மிகப்பெரிய காரியத்தை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவளிடத்தில் இருந்தது. திருமண வாழ்வைச் சுவாரசியமாக வைத்துக்கொள்ள ஒருவர் தன் உணர்ச்சிகளில் என்ன மாதிரியான விந்தைகளையெல்லாம் செய்ய வேண்டியுள்ளது!

நிவேதாவும் சுதர்ஷனும் காதல் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனத்தில் வாழ்ந்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் நிவேதாவுக்குச் சுதர்ஷனை வேலைக்கு அனுப்புவதில் விருப்பமில்லை. பெரு நிறுவன பொறுப்புகளற்ற இச்சுதந்திர வாழ்வு சௌகரியமாக இருந்ததால் நிவேதாவின் நிபந்தனை இவனுக்குப் பிரச்சனைக்குரியதாக இல்லை. வீட்டு வேலைகளை முடித்ததும் விரும்பிய இடங்களுக்கு, கலை நிகழ்ச்சிகளுக்கு, விளையாட்டு மைதானங்களுக்கு, மது விடுதிகளுக்குச் செல்வான்.

நிவேதாதான் இவனைக் காதலித்தாள்; அதை முதன்முதலில் இவனிடம் தெரியப்படுத்தவும் செய்தாள். இவனுக்கு அவளைப் பிடித்திருந்தபோதிலும், தன்னைவிட நான்கு வயது மூத்தவள் என்ற வித்தியாசம் இவனுக்குத் தயக்கத்தை உண்டாக்கி வெளிப்படுத்த விடாமல் தடுத்தது. நிவேதா தனக்கு வேண்டிய பழத்தை ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்கும் சுபாவம் கொண்டவள் அல்லள். மரம் ஏறி அப்பழத்தைத் தனதாக்கிக்கொள்ளும் சிறுமி போல் சுதர்ஷனை உடைமையாக்கிக்கொண்டாள். எவ்வித மெனக்கெடலுமின்றி சுதர்ஷனை அடைந்தாள். பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு ஆண் எப்படிப் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகிறானோ அதேபோல் பெண் ஆணைத் தன் கணவனாக்கிக் கொள்வதற்கு ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட எந்தவித மாயாஜாலங்களையும் சுதர்ஷனிடத்தில் நிகழ்த்த வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்ததில்லை. அவன் அளித்த திருமணத்திற்கான ஒப்புதல் வெறும் இவளது கோரிக்கைக்கான நிறைவேற்றுதலாகவே இருந்தாலும் அதில் விருப்பம் இல்லாமலில்லை.

காலை உணவு சாப்பிட்டு முடித்ததும் நிவேதா தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றாள். புத்தக அலமாரியைச் சுத்தம் செய்துவிட்டு ஓவியக் கண்காட்சிக்குப் புறப்படத் தயாரானான் சுதர்ஷன். புஷ்கினின் இரண்டு கவிதைகளை வாசித்துவிட்டு ஒரு சிகிரெட்டை இழுத்து முடித்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

சென்னை க்ரீம்ஸ் ரோட்டிலுள்ள ஒரு கலைக்கூடத்தின் சுவர்களில் ஓவியங்களும் புகைப்படங்களும் மாற்றப்பட்டவாறு இருக்க, அதனைக் காண்பதற்காகச் சுற்றிலும் கல்லூரி மாணவர்களும் முதியவர்களும் ஆங்காங்கே நின்றிருந்தனர். சுதர்ஷனைப் போலவே அங்கே பலர் தனியாக வந்திருந்தனர். தனிமையைப் பகிர்ந்துகொள்ளும் சிறு கூட்டம் இருப்பதாலேயே அவனுக்கு இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல பிடிக்கும்.

ஒவ்வொரு புகைப்படங்களையும் ஓவியங்களையும் அணுகியபடி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட ஓவியம், மெல்ல அசைந்தவாறிருந்த அவனது கால்களைக் கட்டிப்போட்டு, கண்களைப் பிரமிப்பில் ஆழ்த்திச் சிமிட்டாத வண்ணம் செய்தது. நட்சத்திரங்கள் கொண்ட இருளின் கருமையைப் பெண்ணின் நிர்வாண உடலாக்கி அதன் முலைக்காம்பில் மின்மினிப் பூச்சி ஒன்று அமர்ந்திருக்கும் சித்திரம் அது. அப்பூச்சியின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் பாதி முகம் மட்டும் தெரிவது போன்ற ஓவியத்தில் அவன் மீதி முகத்தைத் தேடிக்கொண்டிருந்தான். பால்யத்தில் அவனது இரவுகள் எப்படி மிக நீண்டதாக இருந்தனவோ அதேபோல் இந்தச் சித்திரத்தின் இரவு அவனுடைய நீண்ட இருத்தலைப் பெற்றுக்கொண்டது. பின்னிருந்து எழுந்த பெண் குரலொன்றைக் கேட்கையில், ஓவியத்திலிருக்கும் பெண்தான் பேசுகிறாளோ என்று குழம்பிப்போகும் அளவிற்கு அதில் மூழ்கியிருந்தான். பின்பு பிரக்ஞை திரும்பி குரல் எழுந்த திசையை நோக்கினான்.


“I appreciate your guts. இந்த செமி நியூடிட்டி பெயின்டிங்கை இவ்ளோ நேரம் பார்த்திட்டு இருந்தது நீங்க மட்டும்தான்”


“Actually, I was looking for a Signature”


“பேருக்காகவா பெர்சனுக்காகவா?”


“உங்களுக்குத் தெரியுமா ஆர்டிஸ்ட் யாருன்னு?”


புன்னகைத்த அவள் தனது இரு கைகளையும் விரித்தபடி தான்தான் என்பதைத் தெரியப்படுத்தினாள்.


“ஏன் சிக்னேச்சர் போடல?”


“நான் பொதுவா என்னோட எந்தப் பெயின்டிங்லையும் சிக்னேச்சர் போட மாட்டேன்!”


“யாராவது விலை கொடுத்து வாங்கி அவங்களோட சிக்னேச்சர் போட்டுக்கிட்டா திருட்டு ஆகிடாதா?”


“என்னோட பெயின்டிங் இன்னொருத்தரோட பேர்ல வரதுல பிரச்சனையில்ல. இன்னொருத்தரோட பெயின்டிங்கை என் பேர்ல எழுதாத வரை சரி”

அவளுடைய கலையும், அதை உடைமையாக்க முற்படாத குணாம்சமும் சுதர்ஷனுக்கு அவள்மீது ஏற்பட்ட முதல் அபிப்பிராயமாக விளங்கியது. பெரும்பாலும் முதல் அபிப்பிராயம் என்பதெல்லாம் ஒரு புதிய நபருடன் தன்னை நெருக்கமாக்கிக்கொள்வதற்காகத் தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்கு என்பதை அவன் அறிந்தேயிருந்தாலும், பின் வரும் நாட்களில் அந்நபர் செய்யவிருக்கும் கிறுக்குத்தனங்களைப் பொறுத்துக்கொண்டு விலகாமலிருக்க அவனுக்கு இதுபோன்ற அபிப்பிராயங்கள் முக்கியமாகப்பட்டன.


“அந்த பெயின்டிங் எங்க இருந்து வந்ததுன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று சுதர்ஷன் கேட்க, அவள் யோசித்தாள். அதில் சொல்வதற்கான தயக்கத்தை உணர்ந்துகொண்ட சுதர்ஷன், “இட்ஸ் ஓகே, அது பெயின்டிங்கோட எசென்ஸை குறைச்சிடும்னா வேண்டாம்” என்றான்.


“While making love with my boy friend” என்றாள்.


மீண்டும் அந்த ஓவியத்தைக் கண்ட அவன், காதலனைத் தனது கலையில் மின்மினிப் பூச்சியாக்கியிருக்கும் அவளது கற்பனையை வியந்தான். சித்திரம் பிறந்த கதையைக் கேட்டறிந்து கொண்டபின் அந்த ஓவியத்தின் சாரம் மேலும் மெருகேறியது.


“உங்க பேரென்ன?” என்றான் சுதர்ஷன்.


“மணிமொழி”


“மணிமொழி, You’re a good Woman Artist”


“ஐயோ, போதும் பா! முதல்ல இந்த ‘Woman Artist’னு அட்ரெஸ் பண்ணுறதை நிறுத்துங்க. என்னைக் கேட்டா நான் ‘Best Artist’னே சொல்லுவேன்”


“கலைஞர்களை பெஸ்ட்னு லிஸ்ட் பண்ணும்போது ஆண் - பெண் பாகுபாடு இல்லாமத்தான் பண்ணனும். ஆனா நீங்க ஜெண்டரை சொல்லியாக வேண்டிய அவசியம் இருக்கு. ஒடுக்கப்பட்ட சமூகமும் பாலினமும் தங்களைக் கலைமூலம் வெளிப்படுத்திக்கொள்ளும்போது தன் அடையாளத்தைச் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கு.


ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறாங்க. ரொமான்டிக்கா இல்ல, ரொம்ப டார்க்கா, பித்து நிலையுல. அவங்க காதல் ஒரு கட்டத்துல முறிது. இப்போ Male Egoல அந்த ஆள் தன் காதல் கதையை ‘பெங்கால் நைட்ஸ்’ என்ற தலைப்புல நாவலா எழுதிடுறாரு. அவர் ரைட்டிங்கோட தனித்துவமே கவித்துவம்தான். அந்தப் பெண்ணை பொயட்டிக்கா சபிச்சிடுறாரு. அதுமட்டுமில்லாம தான் அந்தப் பெண்ணோட செக்ஸ் வெச்சிக்கிட்டதா பொய்யா எழுதுறாரு. அந்தக் கதாபாத்திரம் இவரோட முன்னாள் காதலிதான்னு அந்த நாவலைப் படிக்கிற அவருடைய ஃப்ரெண்ட்சுக்குத் தெரிஞ்சிடுது. நாவலைப் படிச்ச அந்தப் பெண் Character Assassinate செய்யப்பட்டதா உணர்றாங்க உடனே அவங்க ‘கொல்லப்படுவதில்லை’னு ஒரு நாவல் எழுதுறாங்க. அதே காதல் கதைய ஒரு பெண்ணின் கோணத்துல சொல்லப்பட்டதும் உண்மையா அவங்க காதல்ல என்ன நடந்ததுன்னு எல்லாருக்கும் ஒரு பார்வை கிடைச்சது. ‘பெங்கால் நைட்ஸ்’ நாவலால அவங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரை தன்னோட எழுத்துமூலம் மீட்டுகிட்டாங்க. ‘கொல்லப்படுவதில்லை’ நாவலுக்காக மைத்ரேயி தேவிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சது. ‘பெங்கால் நைட்ஸ்’ நாவலுக்கு எந்த அங்கீராமும் கிடைக்கல. இப்போ மைத்ரேயி தேவி தன்னை ஒரு பெண் எழுத்தாளர் அடையாளப்படுத்திக்க வேண்டிய கட்டாயம் ஏன்னு புரியுதுல?”


அடேய் சுதர்ஷா! இது தகுமா? முதன்முதலில் நீ நிவேதாவைச் சந்திக்கும்போது அவள் பேசிய அதே வார்த்தைகளைக் கொஞ்சமும் மாறாமல் அப்படியே பேசுகிறாயே. அவள் வாங்கிக் கொடுத்துத்தானே நீ அந்த இரண்டு நாவல்களையும் வாசித்தாய். எந்தக் காரணத்தினால் நிவேதாமீது உனக்கு முதல் அபிப்பிராயம் உண்டானதோ அதே சொற்களை நீ ஒரு பெண்ணிடமல்லவா பேசிக்கொண்டிருக்கிறாய்! இதன் விளைவுகளை அறிந்துதான் இப்படி மூச்சுமுட்ட அவளுக்கு விளக்கிக்கொண்டிருக்கிறாயா? அவள் கரு விழியில் தெரியும் உன் உருவம் தற்போது நட்சத்திரங்களைப் போல் மிளிர்கிறதே!


”Interesting! நான் இதைக் கொஞ்சம் பொறுமையா யோசிக்கனும். எனக்கான அவசியம் வரப்போ கண்டிப்பா நானும் என்னை வுமன் ஆர்டிஸ்ட்டா அட்ரெஸ் பண்ணிக்கிறேன்” என்றாள்.


கண்காட்சியிலிருந்து வெளியே வந்த இருவரும் தள்ளுவண்டிக் கடையில் நுங்கு வாங்கிச் சாப்பிட்டனர். நுங்கை ஒவ்வொன்றாக உரித்துச் சாப்பிட்டபடி மரங்கள் அதிகமிருந்த சாலையில் நடந்துகொண்டே பேசினர்.


“உங்களுக்கு வேற எந்தெந்த வுமென் ஆர்டிஸ்ட்லாம் பிடிக்கும்?” என்றாள் மணிமொழி.


“எனக்கு பெயின்டிங் ஃபீல்ட்ல அவ்ளோவா யாரையும் தெரியாது…” என்று அவன் தயங்க, “அப்போ உங்களுக்கு அதிகம் தெரிஞ்ச ஃபீல்ட்ல சொல்லுங்க” என்றாள்.


“நளினி ஜமீலா ரொம்ப பிடிக்கும். அவங்க ஒரு Documentary Filmmaker, Writer & Sex Worker. இப்டிதான் நான் வகைப்படுத்துவேன். ஆனால் அவங்க தன்னை எப்போமே முதல்ல செக்ஸ் வொர்க்கராத்தான் அறிமுகப்படுத்திப்பாங்க. I read her Autobiography. Such an Inspiring Woman She is! அப்புறம் கமலா தாஸ் பிடிக்கும். அவங்களோட சுயசரிதைல Monogomous Relationship Stereotypes எல்லாம் உடைச்சிருப்பாங்க. நம்ம அடுத்த தடவை பார்க்கும்போது இந்த ரெண்டு புக்ஸையும் உங்களுக்குக் கொண்டு வரேன். எம்.ஏ.சுசிலாகூட இன்ஸ்பைரிங் லேடி. க்ரைம் & பனிஷ்மென்ட் நாவலைத் தமிழ்ல மொழிபெயர்த்தவங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ்ல வெளியானதுலயே அதான் பெஸ்ட் ட்ரான்ஸ்லேஷன் வொர்க். அவ்ளோ எஃபோர்ட் போட்டிருப்பாங்க”


டேய் சுதா, எல்லாம் சரி. ஆனால் கடைசியில் ஒரு போடு போட்டாயே, உனக்கே நியாயமாக உள்ளதா? யாரைக் கேட்டு நிவேதாவின் புத்தகங்களை இவளுக்குக் கொடுக்க வாக்குறுதியளித்தாய்? உனக்குப் பிடித்த பெண் கலைஞர்களைப் பற்றிச் சொல்லச் சொன்னால் நீ என்னடா நிவேதாவுக்குப் பிடித்தவர்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்? ஓ! அவள் உன் மனைவியென்பதால் அவளுக்குப் பிடித்த அனைத்தும் உனக்கும் பிடித்துவிட்டதா? இருந்தாலும் ஒருவன் இவ்வளவு அடிபணியக்கூடாது சாமி.


அறிவுசார் உரையாடலால் இருவருக்கும் விழிகளில் வண்ணத்துப்பூச்சி வருடிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது. மணிமொழி தன் காதலனைப் பற்றியும், சுதர்ஷன் தன் மனைவியைப் பற்றியும் தெரியப்படுத்திய வண்ணம் பேச்சுகள் நீண்டுகொண்டே போயின.

உணவகத்தில் மதிய உணவைச் சாப்பிட்டபோது இருவரும் நெடுநாள் பழகிய நண்பர்கள் போல் நெருக்கமாகியிருந்தனர். பக்கத்துத் தெருவில்தான் தனது அறை இருப்பதாகவும், வீட்டுக்கு வந்து தன்னுடன் ஒரு கோப்பை ரெட் ஒயின் பகிர்ந்தே ஆக வேண்டுமென்றும் மணிமொழி கட்டாயப்படுத்தினாள். மங்கையின் குரலுக்கு அடிபணிந்து பழகியிருந்த சுதர்ஷனால் அவளது அழைப்பை மறுக்க முடியவில்லை.

மணிமொழி வீட்டின் வாசம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் ஃப்ரிட்ஜிலிருந்து ரெட் ஒயின் பாட்டிலையும் இரண்டு மதுக் கோப்பைகளையும் எடுத்துத் தயார் செய்துகொண்டிருந்த சமயத்தில், இவன் அவளது அறையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் இதுவரை ரெட் ஒயினைத் தன் காதலனுடனும் அம்மாவுடனும் மட்டுமே பகிர்ந்திருக்கிறாள். அவளுக்கு ரெட் ஒயின் என்பது கடவுளின் குருதி. தனக்காக அளிக்கப்பட்ட ஒயினின் முக்கியத்துவத்தையே அறியாமல் ‘சீர்ஸ்’ சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகினான் சுதர்ஷன். ஹாங் காங் இசைக் கலைஞன் ஷிகெரு உமெபயஷியின் சாக்ஸஃபோன் மியூசிக்கை ஸ்பீக்கரில் ஒலிக்க விட்டாள் மணிமொழி. ஒயினும் சிம்ஃபனியும் இணைந்து உண்டாக்கிய ஆத்ம நிலை அவர்களை ஒருவரையொருவர் கண்ணோடு கண்ணிணைக்க வைத்தது. ஒவ்வொரு சிப் ஒயின் உள்ளே செல்லும்போதும் அவள் சுதர்ஷன்மீது தனக்குத் தோன்றியிருக்கும் காதலை உணர்ந்தாள். இவனை அறிமுகப்படுத்தியதற்காக தன் ஓவியத்திற்கு தானே நன்றி சொல்லிக்கொண்டாள். ஒருவேளை தான் அந்த ஓவியத்தை இப்போது தீட்டியிருந்தால் வலது முலையில் பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போல வரைந்திருப்பதாக நினைத்து வெட்கப்பட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்புக்கான காரணம் புரியாத சுதர்ஷனும் அவளது புன்னகையில் பங்கெடுத்துக்கொண்டான். உடலில் ஒயின் பரவ பரவ அவளுக்கு அந்த இரண்டு பூச்சிகளையும் இறுகக் கட்டுப்பிடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. சுதர்ஷனைப் பிடித்துப் போன ஒவ்வொரு கணத்திலும் அவளுக்குத் தன் காதலன்மீதான காதலும் கூடிக்கொண்டே இருந்தது. ஒரு காதல் மற்றொரு காதலையும் அணையின்றி அனுமதிக்கிறதெனில் அது எவ்வளவு அற்புதமானதாக இருக்கும்!

மதுக் கோப்பை தீர்ந்தவுடன் ஒருவர் இன்னொருவருடன் இணையும் காம களியாட்டத்தின் முன்விளையாட்டுகளைத் தொடங்கினர். உதடுகளை தன் வசம் ஈர்க்கச் செய்து இணைக்க விடாமல் விலகிப் போகும் சுதர்ஷனின் நையாண்டி செய்கைகளை மணிமொழி மிகவும் ரசித்தாள். ஒருவரது ஆடையை மற்றொருவர் கழட்டி எரிந்து தேகம் எனும் நீளப் பெருங்கடலில் நீந்த ஆயத்தமானார்கள். அவளுடைய இடது மார்பகத்தை அழுத்திப் பிடித்து அம்முலைகளைக் கடித்துச் சுவைத்தான்.

தம்பி சுதா, மின்மினிப் பூச்சி செத்துவிடப் போகிறது. உனது இந்தச் செய்கை அவளுக்குத் தன் காதலனின் நினைவுகளை வரவழைத்துவிட்டால் சிக்கலாகிப் போய்விடும். இடது புறத்தை விட்டுவிட்டு வலது பக்கம் போ.

வலது புறத்திற்குப் போகும் முன்பு இடையிலிருந்த நீண்ட பாலைவனப் பாதையில் புதைந்துகொண்டு நுகர்ந்தான். ஷிகெரு உமெபயஷி தன் இசைத்தலை நிறுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள, அவர்களுடைய மூச்சுக் காற்றும் முனகல் சப்தமும் அந்த அறையில் ஓங்கி ஒலித்தது. ஆனால் இந்த சம்பாஷனையில் அவன் முழு மனதோடு ஈடுபடவில்லை. அவளுடைய உடலைப் பற்றிக்கொண்டிருந்த ஒவ்வொரு கணமும் அவன் மனதில் ஒரு காட்சி தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அவளது அங்கங்களில் அவன் பதித்த ஒவ்வொரு முத்தத்தின்போதும் அக்காட்சி மங்கலான படிமமாக உருப்பெற்றுக்கொண்டிருந்தது. கண்டிப்பாக அது அவளுடைய காதலனைச் சார்ந்த காட்சி இல்லையென்பது உறுதியானதால் அது நிவேதாவாகத்தான் இருக்க வேண்டும். மாற்றாளின் கணவனாக இங்கு வேறொரு பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு அவனைக் கொஞ்சமும் தொந்தரவு செய்யவில்லையெனினும், தன் மனதில் தோன்றும் அக்காட்சியின் தெளிவான வடிவத்தைத் தேடினான். ஒருவேளை இதே நேரத்தில் நகரத்தின் ஏதோவொரு மூலையில் தன்னைப் போலவே நிவேதாவும் எல்லையை மீறியிருப்பாளோ என்ற எண்ணமாகக்கூட அது இருக்கலாம். பெரும்பாலும், ஆண் தன்னுடைய காதலி எல்லை மீறுபவளாக இருக்கக்கூடாது என்றும், பிறரின் காதலிகள் அதற்கு நேரெதிராக இருக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதால் அவன் சராசரியான ஆணாக மகிழ்ச்சியுடனும் காதலனாக ஏமாற்றத்துடனும் இருப்பான். ஆனால் சுதர்ஷன் தன் மனைவியின் மற்ற ஆதிக்க குணங்களைப் போலவே அவளது Sexual Independence-க்கும் அடிபணிந்தவனாகவே இருந்தான்.

மணிமொழிமீதான காமம் கலைந்து, சிந்தை தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்போது அவன் மனதிலெழுந்த அக்காட்சி கடைசியில் தெளிவு பெற்றே விட்டது. அது, மணிமொழியும் நிவேதாவும் உடலோடு உடலிணைந்தும், இதழோடு இதழிணைந்தும், யோனிகள் ஒன்றையொன்று உரசி காம நாடகத்தை நிகழ்த்தும் காட்சி. தான் இப்போது மணிமொழிக்கு என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதனை அப்படியே தனக்குப் பதிலாக நிவேதா செய்வதுபோன்ற விந்தை படிமம். திடுக்கிட்டுப் போன அவன், நடுக்கத்துடன் தன் ஆடைகளை எடுத்து மாட்டிக்கொண்டு உடனே அந்த அறையிலிருந்து வேக வேகமாக வெளியேறினான்.





71 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page