பாலு,
‘ஓல்ட் மங்க்’ சிறுகதை நன்றாக இருந்தது.
“ஓத்தா யார்ரா நீயி? ஆஃப்ட்ரால் என் விந்து”
இந்த வசனத்தை ஏன் இப்படி எழுதியிருந்தீர்கள்? இதை மட்டும் தர்மன் செயற்கையாகச் சொன்னது போல் இருந்தது. பாலு என்கிற கதாசிரியர் உள்ளே நுழைந்து சொல்வது போல உள்ளது. இங்கு ஏன் தர்மன் ‘விந்து’ எனக் குறிப்பிடுகிறார்?
ரஞ்சித் ரவி
*
ரஞ்சித்,
இரண்டு காரணங்களால். ஒன்று, என் அப்பா என்னிடம் அப்படிச் சொன்னதற்காக! இரண்டாவது, தன் மகனை ஏதோவொரு சூழலில் உளவியல் ரீதியாக வெறும் விந்தென நினைக்காத எந்தத் தந்தையுமே உலகிலில்லை. ‘ஓல்ட் மங்க்’ சிறுகதை என் நிஜ வாழ்க்கையிலிருந்து எடுத்து, இவான் துர்கனேவின் ‘தந்தையும் தனையர்களும்’ நாவலின் பாதிப்பில் எழுதிப் பார்க்கப்பட்டது. தந்தை மகனுக்கிடையிலான முரண் அழகியலாக மாறுவதே, என் விந்திலிருந்து உயிர் பெற்று என் வளர்ப்பில் உருவாகி என்னையே எதிர்த்துப் பேசுகிறான் என்கிற தந்தையின் அகங்காரத்திலிருந்துதான்.
பாலு.
***
Comments