பரிச்சயம் இல்லாத எதன் மீதும் எனக்குப் பயம் மட்டுமே வரும்.
நான் வீட்டில் மட்டுமே வளர்ந்த பையன். எனக்குத் தெருவில் நண்பர்கள் இல்லை. அவர்களோடு சேர்ந்தால் கெட்டு விடுவேன் என்று வெளியே சென்று விளையாட அனுமதி தரவில்லை அம்மா. அதனால் கிரிக்கெட் ஆடும் வயதில் கிரிக்கெட் ஆட போனதில்லை, கியர் வண்டி ஓட்ட வேண்டிய வயதில் கியர் வண்டி ஓட்டியதில்லை, ஜிம் போக வேண்டிய வயதில் ஜிம் போகவில்லை. திருநெல்வேலியில் வளர்ந்தும் கூட நீச்சல் தெரியாது. இன்று வரை இது எதுவும் எனக்குத் தெரியாது. கற்றுக் கொள்ள முயற்சி செய்ய பயம். அதைத் தவிர்த்துவிட்டு ஓட நினைப்பேன்.
ஆனால் காதல், போர்ன் இதைப் பயிற்சி செய்ய யார் அனுமதியும் கேட்கவில்லை. வர வேண்டிய வயதில் பழக்கத்திற்கு வந்தது. பள்ளியின் இறுதி இரண்டு ஆண்டுகள், கல்லூரியின் முதலாம் ஆண்டு வரை என்னை இந்தப் போர்ன், Masturbation கட்டுப்படுத்தவில்லை. ஆனால் ஊரடங்கு காலம் தொடங்கிக் கல்லூரி முடித்து இந்த இரண்டு ஆண்டுகள் என இந்த நான்கு ஆண்டுகள் போர்னின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
எனக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. நானும் ஒரு நாத்திகவாதி. நானும் இலக்கியம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்தப் போர்ன், Masturbation தவிர்க்க என்னை நானே பிஸியாக ஆக்குவேன். ஆனால் நான் மீண்டும் மீண்டும் வீழ்ச்சி அடைகிறேன்.
என்றோ ஒருமுறை பேஸ்புக்கில் இப்படி ஒரு Quote பார்த்தேன். 'Masturbation is a Maze there is no turning back'. இன்று வரை அந்த Quote உடன் தோற்றுக் கொண்டே இருக்கிறேன்.
ஒரு லட்சியவாதி போல நடந்துகொள்ள முடியவில்லை. கல்லூரி பருவம் வரை இருந்த self Discipline முற்றிலும் போனது. இந்த self discipline மீண்டும் கொண்டு வர இறை நம்பிக்கை எனக்குத் தேவை என்று . ஆனால் கடவுளின் மேல் நாட்டம் வரவில்லை. அப்படியான தருணத்தில்தான் 'சொனாட்டா' வாசிக்கத் தொடங்கினேன்.
நான் ஏன் சுயபுராணம் பாடிக்கொண்டியிருகிறேன்?
'சொனாட்டா'வின் ஆரம்ப அத்தியாயங்களை வாசித்து முடிக்கும்போது என்னை நானே திரும்பிப் பார்க்க வைத்தது. இவை அனைத்தும் அப்போது தோன்றிய எண்ணங்கள். தாஸை சந்தித்த ருத்ரா போல் சொனாட்டவின் வாசிப்பு அனுபவம் இருந்தது எனக்கு. மிகவும் தேவையான நேரத்தில் 'சொனாட்டா' நடந்தது எனக்கு. 'சொனாட்டா'வின் ஆரம்ப அத்தியாயங்கள் எனக்கு நடந்தது. அதன் இறுதி அத்தியாயங்களை இனி நான் வாழப் போகிறேன்.
தாங்கள் இந்த நாவலை எழுதத் தொடங்கும் முன் இருந்த Lifestyle அல்ல, இதை நீங்கள் எழுதி முடிக்கும் போது இருப்பது. சொனாட்டா மூலம் பாலு எனக்கு ஒரு வாழ்க்கைமுறையைப் பரிந்துரை செய்துள்ளீர்கள்.
எனக்கு நான் மாஸ்டராக இருப்பது தான் அது.
மீண்டும் நன்றிகள்!
- நந்தா
*
Comments