top of page
Search
Writer's pictureBalu

1% குழு

Updated: Jan 30, 2022

இந்த ஆண்டு நான் Explore செய்த சிறந்த யூடியூபர் ஹம்ஸா. கடந்த செப்டம்பரிலிருந்து வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் அதுசார்ந்த செயல்களில் ஈடுபடுவதிலும், அதுசார்ந்த கட்டுரைகள் மற்றும் காணொளிகள் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டு வந்திருந்தேன். அந்த வகையில் யூடியூபால் பரிந்துரைக்கப்பட்டவர்தான் ஹம்ஸா. வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர விரும்புவோர் ஹம்ஸாவிடம் தங்களை ஒப்படைத்துவிட வேண்டுமென்றே சொல்வேன்.


இவரது காணொளிகளை முதன்முறை பார்ப்போருக்கு நவீன் மொசார்ட்டின் ஆங்கில வெர்ஷனாகத் தெரியலாம். ஆனால் அது தவறான ஒப்பீடு என்பதற்கும் சில உதாரணங்கள் உள்ளன. இருவரும், ஆண்களுக்கான Masculine குணங்களை மீட்டெடுக்க முனைபவர்கள். ஆனால் ஹம்ஸா ஒருபோதும் நவீனின் #தாடி கட்டுரையைப் போல முட்டாள்தனமாக உளறிக்கொண்டிருக்க மாட்டார். பெண்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமெனில் தாடி வளர்த்துக்கொள் என்பார் நவீன்; யாருக்காகவும் அல்லாமல் உனக்காக உனது டெஸ்டாஸ்டிரோனை வளர்த்துக்கொள் என்பார் ஹம்ஸா. டெஸ்டாஸ்டிரோன் கூடினால் தாடி தானாக வளரப்போகிறது.


ஜெஃப்ரிக்கும் அடானிஸுக்கும் உள்ள வித்தியாசங்களை விவரிப்பதில் துவங்கி இறுதி முத்தம் வரை தனது காணொளிகளை வடிவ ரீதியாக ஒரே மாதிரியாக அமைத்திருந்தாலும் ஹம்ஸாவினுடைய ஒரு சார்ப்புடைய பார்வை அல்ல. ஆண்கள் Masculine ஆகத்தான் இருக்க வேண்டுமென மூதாதையர்கள் பழக்கப்படுத்தியது முடிந்துபோய் தற்போது, ‘ஆண்களுக்குள்ளும் பெண்தன்மை கொண்ட குணங்கள் இருக்கலாம்’ என்று பெண்களே பதிவிடும் சமூக வலைதள காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு சொல்லும் பெண்களே அப்படிப்பட்ட ஆண்களைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது சந்தேகமே! ஆண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலிருந்து எவ்வாறு இருக்கலாம் என்பது வரை அட்டவணை போடும் பெண்களிடம், தனக்குக் கிடைக்கும் ஆண் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்ற அட்டவணையும் இருக்கும். அதில் நிச்சயம் அவள் குறிப்பிட்ட ஆண் இருப்பது அரிது. நவீன் பொசார்ட், ‘ஆண்கள் Masculine ஆக இருக்க வேண்டும்’ என்பார்; ஹம்ஸா, ‘ஆண்கள் Masculine ஆக இருக்க வேண்டியது அவசியம். அதேசமயம் அவர்களுக்கும் மிகக் குறைந்தளவில் பெண்தன்மையும் இருக்க வேண்டும். உதாரணமாக, என்னிடம் 70% ஆண்தன்மையும் 30% பெண்தன்மையும் உள்ளது. அந்த 30% பெண்தன்மைதான் என்னை இந்தச் சேனலை ஆரம்பிக்க வைத்தது; மற்ற ஆண்களைக் குறித்து கவலை கொள்ள வைத்தது; மனிதர்களிடம் கருணையுடனும் அன்புடனும் இருக்க வைத்தது. ஒருவேளை என்னிடம் 100% Masulinity இருந்தால் நான் ஒரு WWE வீரனைப்போல் இருப்பேன். அவனுக்கென எவ்வித உணர்ச்சிகளும் இருக்காது. அவன் தனது பலத்தை நிரூபிப்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தும் ஆதிகால மனிதனே அன்றி, நவீனக் கால மனிதர்களுடன் அவனால் ஒன்ற முடியாது’ என்பார்.


யூடியூபால் முதன்முதலில் எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹம்ஸாவின் காணொளி, நோ ஃபாப் குறித்ததாகும். இந்த வாழ்க்கைமுறைக்கு வருவதற்கு முன் ஒரு நாளுக்கு எத்தனை முறை கர மைதுனம் செய்தாலும் அதுகுறித்து துளியும் குற்றவுணர்வு இருக்காது. ஆனால் நோ ஃபாப்பை சவாலாக எடுத்துக்கொண்ட ஒருவனுக்கு, அன்றிலிருந்து நினைத்த இலக்கை அடையாமல் செய்யப்படும் கர மைதுனம் அனைத்தும் தோல்வியின் வெளிப்பாடே. நான் நோ ஃபாப்பில் 45 நாட்கள் வெற்றிகரமாக இருந்தபின் Relapse ஆக நேர்ந்தது. அதன்பின் நவம்பர் மாத குளிரால் உடல் சொல் பேச்சைக் கேட்கவில்லை. நான் என்றெல்லாம் கர மைதுனம் செய்கிறேனோ அன்றெல்லாம் காலெண்டரில் குறித்துக்கொள்வேன். நவம்பர் மாதம் முழுவதும் நான் வெறும் 8 நாட்கள் மட்டுமே கர மைதுனம் செய்தேன். இதே 6 மாதங்களுக்கு முன் பார்த்தால் ஒரு மாதத்தில் 25 நாட்கள் செய்திருப்பேன். அப்போது இல்லாத குற்றவுணர்வு, இவ்வளவு பெரிய வளர்ச்சிக்குப் பிறகு தலைதூக்குகிறது. இந்தக் குற்றவுணர்வை அடியோடு நீக்குவதே ஹம்ஸாவின் நோக்கம். எந்தவொரு செயலிலும் முதல் முயற்சியிலேயே வெற்றியைக் கண்டுவிட முடியாது. சிறப்பாக எழுத எப்படி ஒருவனுக்குத் தீவிர பயிற்சி வேண்டுமோ அதேபோல்தான் காமத்தை வெல்வதிலும். நாம் முதலில் நமது வளர்ச்சியை எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டும். இதைச் செய்யாதவர்களே பெரும்பாலும் தங்களது comfort Zoneக்குத் திரும்பிவிடுகின்றனர்.


சமூக வலைதள கலாச்சாரத்தில் பெரும்பாலானோரால் உபயோகிக்கத் தயங்கப்படும் ‘Beta Male’ என்ற வார்த்தையை ஹம்ஸா ஓரிடத்தில் பயன்படுத்துகிறார். அவரைப் பொருத்தவரை, Beta Male என்பவன் ஆபாசப்படங்களைப் பார்ப்பவனும், அதிக கர மைதுனம் செய்பவனும்தான். ஒருவனுக்குக் காம உந்துதல் அதிகமாகிறதெனில் அவன் இரு விஷயங்களை உடனடியாகச் செய்யலாம்:


1] ஆபாசப் படங்களைப் பார்த்தல் அல்லது கர மைதுனம் செய்தல் (Instant Gratification - A Beta Male Action)


2] தனக்குத் துணை தேவை என்பதால்தான் இந்தக் காமம் எழுகிறது. இதைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒருவர் வேண்டும். ஆனால் இப்போது நான் தனியாக இருக்கிறேன். துணையைச் சம்பாதிப்பதற்குத் நான் என் தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதியை வளர்த்துக்கொள்ள அதீதமாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுவது. இதைத்தான் அறிவியலில் Sexual Energy Transmutation என்பார்கள். (Delay Gratification - An Alpha Male Action)





நவீன் ஒரு Redpill பதிவர்; ஹம்ஸா இதற்கு எதிரானவர். அவரைப் பொருத்தவரையில் ஆல்ஃபா குணம் என்பது ஞானம், தியானம், உடற்பயிற்சி, வாசித்தல், சமைத்தல், Dating செயலியைப் பயன்படுத்தாமை, போதைப் பொருட்களை உட்கொள்ளாமை, நாட்குறிப்பு எழுதுதல், குப்பை உணவை அகற்றிவிட்டு ஆரோக்கியமானவற்றை மட்டுமே உட்கொள்ளுதல், ஒரு கலையில் அல்லது தொழிலில் சிறந்து விளங்குதல், சமூக வலைதள கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் நவீனக் காலப் பெண்களை நிராகரித்துவிட்டு High Value Womanஐ தேர்ந்தெடுத்தல், துணையைத் தந்தை போல் பார்த்துக்கொள்ளுதல், Short tempered ஆக இல்லாமல் பிரச்னைகளை நிதானமாக எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டவையாகும்.

‘WOMEN AREN’T LOYAL’ என்ற தலைப்பில் ஹம்ஸாவின் காணொளி ஒன்று உண்டு. பொதுவாக இருபதுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆண்களின் மத்தியில் ‘1% Club’ என்ற வாக்கியம் புழங்கிக்கொண்டிருக்கும். அதாவது மேலே குறிப்பிட்ட ஆல்ஃபா தன்மைகளைப் பயின்றுகொண்டிருக்கும் ஆண்களைத்தான் ‘1% Club Men’ என்பார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் உலகிலேயே ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. உலகமயமாக்கல் என்பது வாழ்க்கைமுறையில் எப்படி ஒரு எழுச்சியை உண்டு செய்ததோ, அதேபோல் கொரோனா கால ஊரடங்கும் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. கொரோனாவிற்குப் பிந்தையக் காலத்தில் கணக்கெடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ஆண்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பார்கள் என்பதே என் கருத்து. நூற்றில் தோராயமாக 90% பெண்களுக்கு இந்த 1% ஆண்களை அடைய வேண்டுமென்ற துடிப்பு இருக்கும். அவர்களுக்கோ ‘1% Club’ என்றால் என்னவென்றே தெரியாத சராசரியான ஆண்களே துணையாக வாய்க்கும்பட்சத்தில், தப்பித்தவறி அப்பெண்கள் ஒரு சிறந்த ஆண்மகனைச் சந்திக்க நேர்ந்தால் அவனிடம் செல்வதில் அல்லது சென்று வருவதில் எவ்வித குற்றமோ ஒழுங்கீனமோ இல்லையே! பாலினப் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் சிறந்த ஒன்றை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருப்பது நியாயம்தான். இப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்துகொண்டு, பெண்களின் விசுவாசத்தை மதிப்பிடுவதில் ஒரு பயனுமில்லை. மாறாக, ஓர் ஆண் தன்னை வளர்த்துக்கொள்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். 1% ஆண்மகனை எந்தப் பெண்ணும் விட்டு விலகப்போவதில்லை; அப்படியே சென்றாலும் அவனுக்கு இன்னொரு சிறந்த துணை கிடைப்பதொன்றும் அவ்வளவு கடினமல்ல. இதைத்தான் ஹம்ஸா உரைக்கிறார். இதே Redpillers ஆக இருந்திருந்தால் (அதாவது நவீன் மொசார்ட் வகையான பதிவர்கள்), பெண்களின் விசுவாசத்தைப் பழிசுமத்தி அவர்களை நிராகரிப்பதே Masculinity-ன் உச்சம் என்றிருப்பார்கள். அதனால் ஆண்களுக்கு ஒரு பயனுமில்லை.


இந்தக் காலத்திலும் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டும், தினமும் கர மைதுனம் செய்துகொண்டும், உடற்பயிற்சி செய்யாமல் obese ஆகவும், வீடியோ கேம்ஸ்களை விளையாடிக்கொண்டும், குப்பை உணவை உட்கொண்டும், தங்களை முன்னேற்றிக்கொள்ள முனையாத சோம்பேறியாக ஒருவன் இருக்கிறானெனில், அவன் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

202 views0 comments

Commenti


Post: Blog2_Post
bottom of page