‘துயரங்கள் விற்பனைக்கல்ல’
14 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு பக்கம் : 140 விலை : ரூ.150 For Orders : Whatsapp 9514243334 / 98409 67484 / DM / Amazon link : https://www.amazon.in/dp/8195476317/ref=cm_sw_r_apan_glt_fabc_RHHADRB0VZA8XEJHC9VP
***
உலகத்தோடு பற்றற்றிருப்பவர்கள் காதலைப் பற்றிக்கொள்ள நினைக்கும்போது காதல் தனது கோர முகத்தை வெளிப்படுத்தி விடுகிறது. மனித உணர்வுகளின் கால வெளியிடை குறைந்துவிட்டதால் காதல் சார்ந்த உணர்வின் பசி தீர்ந்தபாடில்லை. அது காதலிப்பவர்களைக் கோரத் தாண்டவம் ஆட வைத்துவிடுகிறது. எப்படிப் பார்த்தாலும் நாம் தவறான காலகட்டத்தில்தான் காதலை நாடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை இப்புத்தகத்தின் கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டேன். பித்து நிலைக்கு ஒவ்வொரு வயது கூடும்போதும் அது தனது பிறந்தநாளன்று கோமாளியின் முகமூடியை அணிந்துகொள்கிறது.
எக்காரணம் கொண்டும் ஒருவர் விற்பனையே செய்யக்கூடாத ஒன்றென நான் கருதுவது துயரம். நம்மைவிட அதீத வலிமையுடைய எதையும் நம்மால் விற்பனை செய்ய முடியாது. துயரத்தால் எவ்வளவு எளிதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிகிறதோ, அவர்களது இருப்பின் கால அளவு அவ்வளவு சிறியதாக இருக்கும். வாழ்வை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கும் ஒருவர் மகிழ்ச்சியாக இல்லையெனில், களத்தில் இறங்குவதற்குப் பதிலாகத் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு தக்க சமயத்திற்குக் காத்திருப்பதே நன்று. விற்பனை செய்யப்பட்ட பொருள், வாடிக்கையாளருக்குப் பிடிக்காதபட்சத்தில் அது விற்பனையாளரிடமே திரும்ப வந்துவிடும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் துயரத்தைக் குறைத்து மதிப்பிடுவது கொஞ்சமும் தகாது.
Comments