“விபச்சாரத்திற்கு சட்டரீதியான அனுமதி கிடைத்தால் பலாத்கார வழக்குகள் குறையும்” என்று சொல்பவர்களுக்கு 10 கேள்விகள்.
1] இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆண்களுக்கு விபச்சாரிகள் கிடைக்க வேண்டும் என்றால் டாஸ்மாக்கைப் போல ஒவ்வொரு தெருவிலும் விபச்சார விடுதிகள் இருக்க வேண்டும். இதற்கு சுமார் 50 லட்சம் பெண்களாவது விபச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். இத்துறையில் பங்களிக்க அவ்வளவு இந்தியப் பெண்கள் தயாராக இருக்கின்றனரா?
2] ‘பாலியல் வறட்சி காரணமாகத்தான் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன’ எனில் ஏன் அழகான ஆண்கள் சிலர் பலாத்காரம் செய்கின்றனர்?
3] பெண்கள் நிறைந்த விபச்சார விடுதி பலாத்காரத்தைக் குறைத்துவிடும் என்றால், இந்தியாவில் பல சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்களே! உண்மையில் பிரச்சனை பாலியல் வறட்சியில்தான் இருக்கிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
4] கலவிக்குப் பெண்களே கிடைக்காததால்தான் ஒருவன் ரேப் செய்கிறான் என்றால் தர்க்கப்படி எந்தத் திருமணமான ஆணும் பாலியல் குற்றங்கள் செய்வதே இல்லை. அப்படித்தானே?
5] ஐரோப்பிய நாடுகளில் விபச்சாரத்திற்கு சட்டப்படி அனுமதி உள்ளது. அங்குள்ள பல நாடுகளில் இந்தியாவைவிட அதிகளவில் பாலியல் வழக்குகள் பதிவாகின்றன. ஏன்?
6] அமெரிக்காவில் விபச்சாரத்திற்கு சட்டப்படி அனுமதி உள்ளது. இது ரேப் எண்ணிக்கை சற்று குறைத்திருப்பதாகவே தரவுகள் சொல்கின்றன. ஆனால் அது தோராயமாக 25% மட்டுமே. விபச்சாரம் ரேப் ஃப்ரீ சமூகத்தை உண்டாக்கும் என்றுதானே சொன்னீர்கள்?
7] ஒருவேளை இந்தியாவில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டால் விலை என்னவாக இருக்கும்? வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஆண்களால் எளிதில் பெறக்கூடியதாக இருக்குமா? அப்படியே எளிதில் அணுகக்கூடியதாக இருந்தாலும் விபச்சாரம் மட்டுமே பலாத்காரங்களைப் பெருமளவில் குறைக்கும் என்பதற்கு ஆழமான வாதங்கள் இருக்கின்றனவா?
8] விபச்சாரத்தால் human trafficking அதிகம் ஆகாதா?
9] விபச்சார விடுதிக்குச் செல்பவன் அன்றைய பொழுதில் காமத்திற்குத் தயாராகிவிட்டே செல்வான். ஆனால் பலாத்காரம் செய்பவன் அப்படிச் செய்வதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அவனது அரக்கக் குணத்தைத் தூண்டுகின்றன. உதாரணமாக, ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவியின் தந்தை அச்சிறுமியைப் பலாத்காரம் செய்தது போல. ஆகவே விபச்சாரம் எப்படி பாலியல் வழக்குகளைக் குறைக்கும்?
10] தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் Masculinity - Femininity Crisis-ஆல் எதிர்பாலின ஈர்ப்பு குறைந்துகொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே பலர் திருமணம் மீதும் பிள்ளை பெறுதல் மீதும் நம்பிக்கை இழந்துகொண்டு வருகின்றனர். பணத்தால் கலவியைப் பெற முடிகிறதெனில் ஆண் - பெண் ஈர்ப்பு அவசியமற்ற நிலைக்குச் செல்ல வாய்ப்பில்லையா?
Комментарии