top of page
Search
Writer's pictureBalu

12 Rules for Life

Updated: Aug 6, 2023

Rule 1 : Stand up straight with your shoulders back

“Get some spine” என்பதை தமிழில் ‘முதுகெலும்பு இல்லாதவன்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிடுவார்கள். ஜோர்டன் பீட்டர்சனை அணுகும் எவருக்கும் தன்னம்பிக்கை பலமடங்கு உயரும். ‘தைரியம்’ என்ற ஆளுமைப் பண்புக்குப் பலரிடம் பலவிதமான வரைமுறைகள் இருக்கின்றன. ஒருவர் ஒருபோதும் ‘Nice Guy’ ஆளுமைப் பண்பில் இருக்கவேகூடாது என்பதை ஜோர்டனிடமிருந்து கற்றுக்கொண்டேன். என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது பல இடங்களில் அவ்வாறு இருந்திருக்கிறேன்.

ஓர் உதாரணம் - கல்லூரிக் காலத்தில் திரைப்பட விழாவின்போது சக மாணவிகளுடன் ஒரு படத்திற்குச் சென்றிருந்தேன். நானும் ஒரு பெண்ணும் ஓரமாக இருக்கையில் அமர்ந்துகொண்டோம். மற்றொரு பெண் என்னைக் கடந்து உள்ளே செல்லுகையில் தெரியாமல் என் கால்களை மிதித்துவிட்டாள். பதற்றமடைந்த அவள், மன்னிப்பு கோரினாள். அவளிடம் எனதருகில் அமர்ந்திருந்த பெண், “விடுடீ, பாலுதானே” என்றாள். அப்போது தீங்கற்ற, மிக எளிதில் அணுகக்கூடிய மனிதனாக இருந்ததை எண்ணி பெருமைப்பட்டிருந்தாலும், அவற்றின் பாதகம் இப்போதுதான் முழு அளவில் விளங்குகிறது. அப்பெண்ணிடம் கடுமையாக நடந்திருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அக்கணம் முக்கியமே அல்ல. “பாலுதானே” என்பது ஒன்றிரண்டு ஆண்டுகளில் நான் அவர்களிடம் பெற்ற ஆளுமைப் பண்பு. ஆக, தவறுகள் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன.

இப்போது நிலவரம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பெண்கள் என்னுடனான நட்பைத் துண்டித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது போகும் பாதை சரியாக இருப்பதாகத் தெரிகிறது.

தைரியத்தைப் பற்றி JP சொல்லியிருக்கும் இரு முக்கிய விஷயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். “You should know how to use the knife but also know to keep it under control”. குற்றவாளியாகக்கூடிய தகுதிகள் இருந்தும் குற்றவாளியாகாமல் இருப்பவனே நல்ல மனிதனாக இருக்க முடியும். ஆபத்தான மனிதனால் மட்டுமே நல்லவனாக இருக்க முடியும்; தீங்கற்ற மனிதன் பலவீனமானவனாக மட்டுமே எஞ்சுவான்.

உலகமும் வாழ்வும் கடினமாகிக்கொண்டிருக்கிறது. உறவுகள் மோசமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான காலத்தில் எவன் ஒருவன் சக மனிதனை அல்லது துணையை முழுமையாக நம்புகிறானோ அவனே தைரியசாலி. உறவுக்குத் தேவையான தகுதியும் அதுவே! தைரியம்தான் பொறுப்புகளை ஏற்கச் செய்யும். சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கக் கற்றுத்தரும்.

Stand up straight with your shoulders back. இவ்வரியை உடல் மொழியில் கொண்டு வர முயன்று பாருங்கள். எங்கிருந்தோ ஒரு தன்னம்பிக்கை குடிகொள்ளும். உடல்மொழிக்கு உண்டான சக்தி அதுவே. ஒவ்வோர் உணர்ச்சிகளுக்கும் முகத்தின் தசைகள் வேறுபடும். காரணமே இல்லாமல் நெற்றிச் சுருக்கத்தில் சோகத்தின் முக்கோண வடிவத்தைப் படரச் செய்தால் இயல்பாகவே மனதில் துயரம் அதிகரிக்கும் என்கிறது அறிவியல் ஆய்வு. ஆகவே உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு உடல்மொழியைப் பிரக்ஞையுடன் கையாள வேண்டியது அவசியமாகும். இதனால்தான் காதல் தோல்வி அடைபவர்கள் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்கின்றனர். உடற்பயிற்சி முதலில் மேம்படுத்துவது மனதைத்தான். Endorphins, Dopamine, Serotonin ஆகிய மகிழ்ச்சி ஹார்மோன்களை அவை அதிகம் சுரக்கச் செய்யும். மனநிலை சீராக இருந்தால் மட்டுமே வேட்டை, காமம், நோக்கம் என எல்லாமே கைகூடும். அதற்கு மனநிலையை மேம்படுத்தும் உடல்மொழி அவசியம்.

Rule 2 : Treat yourself like someone you’re responsible for helping

சமூகக் கட்டமைப்பு/கலாச்சாரம் என்பது ஆண்களால் ஆண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டது என பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டுவதைப் பார்க்கலாம். Chaos பண்பு நிறைந்தவர்கள் அப்படிச் சாடுவதில் தவறில்லை. அவர்கள் உயிரியல் கூற்றுக்கு உண்மையாக இருக்கின்றனர். Order (ஒழுங்கு) யாரால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதற்கு நூற்றுக்கணக்கான வரலாறு உண்டு. நவீன வாழ்க்கைமுறையில் சிக்கிச் சிதையுண்ட பலர், பழைய Order முறைக்குத் திரும்புகின்றனர்.

ஆதாமையும், ஏவாளையும் படைத்தபோது கடவுள் அவர்களுக்குப் பார்வையைக் கொடுக்கவில்லை. அவர்களை செழுமையான மரங்கள் நிறைந்த அற்புதக் காட்டில் வாழ அனுமதித்த இறைவன், வனத்தின் மையத்திலிருந்த மரத்தின் பழங்களை மட்டும் சாப்பிடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். மீறித் தின்றால் இறந்துவிடுவதாக எச்சரித்தார். அதைத் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சகல சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

கடவுளின் தீவிர செயல்பாடுகளை அழிக்க நினைத்த சாத்தான், பாம்பின் ரூபத்தில் ஏவாளை மூளைச்சலவை செய்தது. “கடவுள் பொய் சொல்கிறார். அவர் உண்மையில் உங்கள் மீது அன்பு செலுத்தியிருந்தால் ஏன் அப்படி எச்சரிக்கை விடுக்க வேண்டும்? அந்த மரத்திலுள்ள ஆப்பிளை சாப்பிட்டால் பார்வை வந்துவிடும். எல்லாவற்றையும் பார்க்கும், சிந்திக்கும் திறனை பெறுவீர்கள். கடவுளையே மறுக்கும் தைரியம் வரும். இதற்கெல்லாம் பயந்துதான் கடவுள் உங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவ்வாறு சொன்னார்” என்றது சாத்தான்.

ஆப்பிளை லேசாகச் சுவைத்துப் பார்ப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று ஏளனமாக எடுத்துக்கொண்ட ஏவாள் அதைக் கடிக்கிறாள். அதன் சுவையை உணர்ந்து ஆதாமுக்குக் கொடுக்கிறாள். உலகத்தின் முதல் Simp ஆதாம், தன் துணை கொடுத்த ஒரே காரணத்திற்காகக் கடவுளின் உத்தரவையும் மீறி சுவைக்கிறான். தங்கள் உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வதை இருவரும் உணர்ந்தனர். அவர்களின் உடல் குளிர்ச்சியடைகிறது. பார்வையைப் பெற்ற முதற்கணமே இருவரும் ஒருவரையொருவர் தங்கள் நிர்வாணத்தை உணர்கின்றனர்.

கடவுள் மீண்டும் காட்டிற்கு வந்தபோது இருவரையும் காணவில்லை. “ஆதாம்… ஆதாம்” என்று கூப்பிடுகிறார். மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டிருந்த ஆதாம், தான் நிர்வாணமாக இருப்பதைக் கடவுளிடம் கூறி கூச்சப்பட்டான். “உனக்கு எப்படி உன் நிர்வாணம் தெரியும்? யார் சொன்னது? சாப்பிடக்கூடாத எதையாவது நீ சாப்பிட்டாயா?” என்று வினவினார். “ஏவாள்தான் எனக்கு ஆப்பிளைத் தந்தாள்” என்று சிறுபிள்ளை போல் பழி சுமத்தினான்.

அன்றிலிருந்து இலைகளை ஆடையாய் பயன்படுத்தினர். கடவுளின் உத்தரவை மீறியதிலிருந்துதான் மனிதக்குலத்திற்குத் துன்பம், குழப்பம் போன்ற பல எதிர்மறை உணர்ச்சிகள் தோன்றியது. அங்கிருந்து ஒரு சமூகம் தோன்றி அதற்கென துல்லியமான ஒழுங்குகள் கட்டமைக்கப்பட்டன. இந்த ஒழுங்கு உருவானதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்தது ஏவாளின் Chaos. ஆணின் கூருணர்வைத் தூண்டிய முதல் உயிரினம் பெண்.

Treat yourself like someone you’re responsible for helping. வேண்டப்பட்டவரை பொறுப்புணர்வுடன் பார்த்துக்கொள்ளும் அக்கரை நம் மீதும் இருக்க வேண்டும். மனைவியிடமே பிள்ளையிடமோ, “உனக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதையே செய்” என்று சொல்ல மாட்டோம். ‘எது உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதோ அதை செய்’ போன்ற போலி வாசகங்கள் செயலிழந்துவிட்டன. குழந்தைக்கு சாக்லேட் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் நல்ல தந்தை சாக்லேட்டை கொடுப்பதற்கே யோசிப்பான். ஆகவே நல்ல வளர்ப்பு முறைக்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பில்லை. இந்த ஒழுங்கு நம் மீது நமக்கிருந்தால் சிக்கலைத் தடுக்கலாம்.

Rule 3 - Make friends with the people who wants the best for you

தனித்திருக்கும் இளைஞர்கள் (குறிப்பாக ஆண்கள்) பொது இடங்களில் காதல் தம்பதிகளைப் பார்த்துப் பொறாமை கொள்வார்கள். அது போல சிறந்த நட்புறவுகளைப் பார்த்து பொறாமை கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற நட்புகளைத் திரைப்படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்; இதுவரை நேரில் கண்டதில்லை.

நட்புக்கும் காதலுறவுகளுக்கும் அதிக கோட்பாடுகளை வைத்திருப்பவன் நான். காதலுறவுக் கோட்பாடுகளைச் சந்திக்கும் ஒரு நபரைப் பெற்றுவிடுவேன். ஆனால் வாழ்வில் ஓர் உண்மையான நண்பனையாவது பெற்றுவிட வேண்டும் என்பது கனவாய் இருந்து வருகிறது. ‘நட்பு’, ‘நண்பர்’ ஆகிய சொற்களும், உறவும் சாதாரணமயமாக்கப்பட்டு வருகிறது. நட்புறவின் நெருக்க நிலையைப் பலர் மேலோட்டமாகவே பார்க்கின்றனர்.

இப்போது நான் முழுமையாகத் தனித்திருக்கிறேன். குடும்பத்துடன் வாழ்வதால் ‘தனித்து வாழ்கிறேன்’ என்று சொல்ல முடியாது. பெரும்பாலான நேரத்தை எனது அறையில் கழிப்பதாலும், உணர்வுகளை நானே கையாள்வதாலும் ‘முழுமையாகத் தனித்திருக்கிறேன்’ எனலாம். என்னை அசாதாரணமானவனாகப் பலமுறை நினைத்துக்கொண்டதுண்டு. கடந்த ஓராண்டாகத் தனித்து வாழ்ந்ததன் மூலம் அசாதாரணத்தன்மை முழு அளவில் விளங்கியது. மனிதர்களுக்கு ஏதோ ஒரு நெருக்கமான உறவு இல்லையெனில் அவர்களின் செயல்கள் கண்காணிக்கப்படாமல் போகும். நம் மாற்றங்களைப் பிறர் கண்டறியாமல் முன்னேறவே முடியாது. பிறரால் பின்தொடரப்படாமல் போகும் ஒருவன் ஓரிடத்தில் தேங்கிவிடுவான். ஆனால் யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஆளுமையைச் செதுக்கி வருகிறேன். சுய முன்னேற்ற வாழ்க்கைமுறைக்குப் பின் கூட்டத்திலிருந்து விலகிப்போவதைக் கண்டு, நெருக்கமாய் இருந்தவர்கள் தூரம் போனார்கள். எனக்கான மதிப்பாய்வுகளை எழுதி, என்னை அதிகம் பாராட்டிய நபராகவும், விமர்சித்த நபராகவும் நானாகவே இருந்திருக்கிறேன்.

பதின் பருவத்தின் நட்புறவுகளில் ஏகப்பட்ட தவறுகளைச் செய்திருக்கிறேன். அவர்களிடத்தில் அதிகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்பையும், மன்னித்தலையும் வெளிப்படுத்தியுள்ளேன். எல்லைகளை வகுக்காமல் விட்டதால் சிலர் என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். ஒரு நண்பன் எப்போதும் என்னைச் சந்திக்கத் தாமதமாகவும், போதை வஸ்து உட்கொண்டும் வந்திருக்கிறான். போதை வஸ்துக்களின் நன்மைகளை மட்டுமே பேசும் சிலருடன் பழக்கம் வைத்திருந்தாலும், இன்று வரை அந்த நச்சுகளை எனது உடலுக்குக் கொடுத்துக்கொண்டதில்லை. தங்கள் வாழ்க்கையைப் பற்றி எதையுமே தெரிவிக்காத நண்பர்களிடம்கூட எனது அந்தரங்க விஷயங்களை உரையாடியிருக்கிறேன்.

சுய மதிப்பு குறைவாக இருந்த காலத்தில் அவர்கள் எனது நண்பர்களாகவே நீடித்திருந்தனர். மிகச்சிறந்தவற்றைப் பெறத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதிக்கொள்ளாததாலும், அதற்கான தேடலில் இறங்காததாலும் சீரற்ற நட்பு வட்டம் இருந்தது. அது ஓர் இயலாமை; அற்புதங்களைப் புறந்தள்ளுதல்.

‘உன் நண்பனை மகனிடமோ, தந்தையிடமோ, தங்கையிடமோ அறிமுகப்படுத்தத் தயங்குகிறாய் எனில் அப்படி ஒரு நண்பர் எதற்கு உனக்கு?’ எனக் கேட்கிறார் ஜோர்டன் பீட்டர்சன்.

பொதுவாக மோசமான வாழ்க்கைமுறையில் இருக்கும் நபரிடம் நட்பின் பேரில் சிலர் உடனிருப்பார்கள். இதை விசுவாசம் என்று சொல்லிக்கொள்ளும் அவலம் இருக்கவே செய்கிறது. ஆழ்ந்து யோசித்தால், தன்னைவிடக் குறைவானவன் தனதருகில் இருப்பதையும், ஒருவரைத் திருத்திக்கொண்டே இருப்பதன் மூலம் தன்னை உயர்ந்த இடத்தில் வைக்கும் சுயநலத்தையுமே பேணுகின்றனர். துயரில் உழலுபவனுக்கு வாழ்க்கை கொடுப்பது நண்பனின் பணி அல்ல. அப்படியான ஒரு நட்பிலிருந்து உடனடியாக வெளியேறுவது கருணையற்றிருப்பதும் ஆகாது.

நீங்கள் உயர வேண்டுமென மனதார விரும்பும் நண்பரால், உங்களது வீழ்ச்சிக் கணங்களைக் கண்டு, பொறுத்துக்கொண்டு உங்களுடன் நட்பைத் தொடர முடியாது. நண்பனின் அழிவைக் காண்பவன், அவனை நாகரீகமான முறையில் மறைமுகமாகத் தண்டிக்கவே செய்வான். இந்தத் தண்டனையைக் காதலி வெளிப்படையாகவே தருவாள். ஆகவேதான் நட்பைக் காட்டிலும் காதல் மேன்மையானது.

கஷ்ட காலத்தில் தவிக்கும் ஒருவனை விலகிச் செல்பவனே நல்ல நண்பன் என்ற அடிப்படையில், என்னால் யாருக்கும் நல்ல நண்பனாக இருக்கவே முடிந்ததில்லை. சுற்றியிருப்போரைவிட ஒரு படியாவது மேல் இருக்கிறோமா என்று கணக்கிட்டுக்கொள்ளும் சுயநலமும் Narcissism-உம் என்னிடம் உள்ளது.

அதேசமயம், நான் மோசமான நண்பனும் அல்லன். துன்பத்தில் வாடும் சிடுமூஞ்சியைப் பார்க்கும் மோசமான நண்பன், ஒரு பஃப் சிகிரெட்டையும் ஒரு கோப்பை மதுவையும் உரிமையுடன் வழங்குவான். அவனைக் கண்டறிந்து அகற்றப் பலருக்கு தைரியம் இருப்பதில்லை. ஓர் உறவை முறித்துக்கொள்ள அசாத்திய தைரியசாலிகளால் மட்டுமே முடியும்.

‘Don’t think that it is easier to surround yourself with good healthy people than with bad unhealthy people. It’s not. A good, healthy person is an ideal. It requires strength and daring to stand up near such a person. Have some humility. Have some courage. Use your judgement, and protect yourself from too-uncritical compassion and pity.

Make Friend with people who want the best for you.’

Rule 4 : Compare yourself to who you were yesterday, not to who someone else is today

”Compete with yourself” என்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது முட்டாள்தனமாகவே பட்டது. போட்டி மனப்பான்மைக்கும் (Compete) பிறருடன் ஒப்பிடுதலுக்கும் (Comparison) வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். போட்டி மனப்பான்மை இல்லாமல் ஒருவரால் வெல்லவோ முன்னேறவோ முடியாது. இது தொழில் செய்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.

நாம் வாங்க நினைக்கும் அதே காரை வாங்குவதற்காகப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். நாம் காதலிக்கும் பெண்ணைக் கவர ஒரு க்யூவே நிற்கிறது. நம் துணை மீதும் பலர் தங்களது ஓரப்பார்வையை வீசியபடி உள்ளனர். நீங்கள் குறி வைத்த பங்குகளை அள்ளி எடுக்க ஒருவன் பங்குச்சந்தை திறப்பு நேரத்தில் காத்துக்கொண்டிருக்கிறான். நவீனக் காலத்திற்கான பிரத்யேக கதைக் கருவைப் பிடித்துவிட்டதாக நினைத்துக் குதூகலிக்கும்போது 19ம் நூற்றாண்டிலேயே அது எழுதப்பட்டுவிட்டதைப் படித்ததும் உண்டாகும் ஏமாற்றத்தைப் பல எழுத்தாளர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே, போட்டி மனப்பான்மை தவிர்க்க முடியாதது; தன்னலத்திற்கு அவசியமானது.

ஆனால் பிறருடன் ஒப்பிடுதல், நம் உயர்வுக்கான படிகளை நாமே தகர்த்தெறிவது போலாகும். பெற்றோர், பிள்ளைகளுக்கு இக்கொடுமையைச் செய்கின்றனர். நாளடைவில் வளர்ந்த பிறகு பிள்ளைகள் அதற்குப் பழகிக்கொள்கின்றனர். உண்மையில் நாம் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டியது பிறருடன் அல்ல; நேற்றைய நம்முடன். போட்டிப் போட வேண்டியது நேற்றைய நம்முடன் அல்ல; பிறருடன்.

Rule 5 : Do not let your children do anything that makes you dislike them

ஓர் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.40,000 ஊதியத்தில் குடோனைப் பார்த்துக்கொள்ளும் வேலை வந்திருந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவ்வேலையை மறுத்துவிட்டார். “உங்க பையனைப் பார்க்கச் சொல்லலாமே!” என்று கேட்டதற்கு, “அவனா, பேரையே கெடுத்துடுவான். அந்த ஓனர் என்னை வாங்க போங்கன்னு கூப்டுட்டு இருக்காரு. இவன் வாடா போடான்னு கூப்பிட வெச்சிருவான்” என்று அஞ்சினார்.

பீட்டர்சனின் இந்த விதி இந்தியர்களுக்கு மேலோட்டமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் முக்கியமான விதியாகக் கருதப்படுகிறது. அங்கு Adultism மறுக்கப்படுவது Racism, Fascism, Sexism ஆகியவற்றுக்கு இணையாகப் பார்க்கப்படுகிறது. பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை மோசமாகவே இருந்திருக்கிறது. ஒழுக்கம் மற்றும் தண்டனையைப் பெற்றோர் மிகக் கவனத்துடன் பிள்ளைகளிடம் கையாள வேண்டும். துல்லியமான அளவில் பிள்ளைகளுக்கு இவை கடத்தப்பட வேண்டும். ‘அப்பன் அடிக்காத பிள்ளையை ஊர் அடிக்கும்’ என்று மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. தண்டனைகள் பிள்ளையின் இளமைக்காலத்தைப் பாதிக்கும் வகையில் கண்டிப்புடன் இல்லாதவாறு இருக்க வேண்டும். தண்டனைகளை முழுமையாக மறுக்கும் பெற்றோரால் ஒரு நல்ல பிள்ளையை வளர்த்தெடுக்க முடியாது. அதேபோல் பிள்ளை, உலகத்தைப் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவதால் அதற்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதும் பெற்றோரின் பொறுப்பு. நவீனக் காலத்தில் பெற்றோருக்கே அந்த ஒழுக்கம் இருப்பதில்லை.

ஒழுக்கமே சுதந்திரம் எனவும், அது மீறப்பட்டால் தானே தனக்குப் பிடிக்காத வகையில் மாறும் அவலத்தையும் பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும். குழந்தைப் பெறுதலை வெறும் சம்பிரதாயமாகப் பார்க்கும் பலர் நம் சூழலில் உள்ளனர். பிள்ளை வளர்ப்பு ஓர் அசாத்தியமான பொறுப்புணர்வு. அதற்குக் கடின உழைப்பும் தியாகங்களும் அவசியமாகின்றன. அவற்றை நம்மிடம் நோக்கத் தொடங்கிய குழந்தை, ஒரு கட்டத்தில் தானாகவே ஒழுக்கமாக வளரத் தொடங்கிவிடும்.

குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்காதபோது பெற்றோர் சொல்லும் குறைந்தபட்ச உத்தரவு பிள்ளைகள் மத்தியில் முக்கியமானதாகக் கருதப்படும். கண்டிப்புடன் செயல்பட்டால் அதுவும் இழந்துவிடும். பெற்றோரின் முக்கியத்துவத்தைப் பிள்ளை உணர, முதலில் அவர்கள் நல்ல தம்பதியாக இருக்க வேண்டும். விதிமுறையை ஒருவர் மட்டுமே உத்தரவிட்டால் அதற்கு மதிப்பிருக்காது. எல்லாவற்றையும்விட முக்கியமானது, தவறு தங்கள் மீது இருந்தால் பிள்ளைகளிடம் அகங்காரம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகுதல் அவசியம்.

Rule 6 : Set your house in perfect order before you criticize the world

வெறுக்கும்படியான எந்தச் செயல்களையும் இன்றிலிருந்தே செய்யாதிருக்க ஜோர்டன் வலியுறுத்துகிறார். அவருக்கு இளமைக்காலத்தில் மதுப்பழக்கம் இருந்திருக்கிறது. சரியான அளவில் மதுவை உட்கொண்டால் பதற்றம் (Anxiety) தணியும். ஆனால் தனது பழக்கத்தை எண்ணி வெட்கிப்போன காரணத்தால் அதைக் கைவிட்டார். அதிமேதாவிகளுக்குப் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் கையாள மது/புகையைத் தவிர எவ்வளவோ வழிகள் உள்ளன.


Rule 7 : Pursue what is meaningful (not what is expedient)

“நீ என்னவாக அறியப்பட வேண்டும்?” என்ற கேள்வியை சமீபத்தில் ஸ்ரீனியும் லீலாவும் வெவ்வேறு வாக்கியங்களில் கேட்டனர். இதே கேள்வி ஜோர்டன் பீட்டர்சனிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது “Someone Honest” என்று பதிலளித்திருப்பார். அப்போதிலிருந்தே இக்கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டேன். கல்லூரிக் காலத்தில் சிறந்த இயக்குநர் ஆக வேண்டும் என்றும், அதன்பிறகு சிறந்த எழுத்தாளர் ஆகும் லட்சியமும் இருந்தன. அவை பணியாகவோ, தொழிலாகவோ இருக்குமே அன்றி லட்சியவாத பிரிவில் வர சாத்தியமில்லை என நினைக்கிறேன்.

‘மகிழ்ச்சி மனதுக்குக் கேடு தரும்’ கட்டுரையில் ‘பணக்காரனாக வேண்டிய தேவை எல்லோருக்கும் இருக்கிறது...’ என்று எழுதியிருப்பேன். நான் பணக்காரன் ஆக விரும்புகிறேனா எனச் சிந்தித்தேன். அது என் குறிக்கோளாக இருந்தால் ஜோர்டன் பீட்டர்சன் மாணவனாக எதையும் பயிலாதவனாகவே மிஞ்சுவேன். நான் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கி கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்தபடி இரண்டு காதலிகளுடன் கைகோர்த்துக்கொண்டு நட்சத்திர உணவகத்திற்குள் செல்வதை இன்னொருவன் பார்க்கிறான் எனில் அவன், ‘பாலு நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்று, பணிச்சூழலில் உழைத்து முன்னேறி இந்த இடத்தை அடைந்திருக்கிறான்’ என்றா நினைப்பான்? இவ்வளவு பணத்தை ஈட்ட இவன் கண்டடைந்த குறுக்கு வழி என்னவென்பதே சுற்றியிருப்போரின் யோசனையாக இருக்கும்.

கடந்த ஓன்றரை ஆண்டில் நான் செய்த வாழ்க்கைமுறை மாற்றங்களை வைத்து என் குறிக்கோளைக் கண்டடைந்திருக்கிறேன். நான் மிகச்சிறந்த ஓர் ஆணாக அறியப்பட வேண்டும். பெறப்போகும் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாகச் செயல்பட வேண்டும். மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் செயல்பட இயலாமல் தத்தளிக்கும் ஆண்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனது லட்சிய யாத்திரைக்குச் செல்லும் முன் என்னைக் கூர்தீட்டிக் கொள்ளுதல் அவசியம்.

தியாகத்தின் மூலமே உயர்ந்த நோக்கங்களை அடைய முடியும் என்கிறார் JP. Delaying the Gratification எனப்படும் இன்பத்தை ஒத்தி வைக்கும் பழக்கத்தை மேற்கொள்வது கட்டாயம். இதைப் பற்றி ஹம்சாவின் கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட ஒருவன், முதலில் இளமை மீதான துடிப்பையும், பாலியல் வேட்கையையும் தியாகம் செய்ய வேண்டும். மகிழ்ச்சியைப் பின்தொடர்ந்து சென்ற எவரும் மதிக்கத்தக்கக் கலைஞர்களாகவோ அறிஞர்களாகவோ ஆனதில்லை.

தற்கால இளைஞர்களுக்கு அழகை அடையும் ஆசை மட்டுமே இருக்கிறதே அன்றி, அதற்கான விலையைக் கொடுக்க தயாராக இல்லை. அழகின் தேடலை அறியும்போது, அது கோரும் அசுர உழைப்பை எண்ணித் திகைத்துப் போகின்றனர். உடனடியாகக் கிடைக்கும் இன்பத்திற்கு நீண்டகால உத்தரவாதம் இல்லையெனத் தெரிந்தும், போதை வஸ்துவைக் கைவிட முடியாமல் தவிக்கும் மறுவாழ்வு மைய நோயாளி போல் அலைகின்றனர். உடனடி இன்பத்தை (Instant Gratification) பின்தொடர்வது அவர்களுக்கே பிடிக்காதபோதிலும் அவர்களின் இயலாமையும் கையாலாகாத்தனமும் அதைச் செய்ய வைக்கிறது. உடனடி இன்பத்திற்கு எவ்வித தார்மீக மதிப்புகளுமே (Expedient) அல்ல. தார்மீக மதிப்பு அல்லாத செயல்களைச் செய்வதற்கு நம்பிக்கையோ பற்றோ தேவையில்லை; தியாகமும் தைரியமும் துளியும் அன்றி அவற்றில் ஈடுபட முடியும்.

“உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ/என்ன செய்யத் தோன்றுகிறதோ அதையே செய்யுங்கள்” போன்ற வசனத்தைத் திரைப்படங்களில் பரவலாகவே கேட்டுப் பழகி ரசித்துவிட்டோம். இதுபோன்ற வசனத்தால் Influence ஆகும் பலர் இளைஞர்களாக உள்ளனர். இளமை, உழைப்பதற்கான பருவம் என்பதால் நமது தேவையை அல்லது அவசியத்தை அறிய முடியாத குழப்ப நிலை உண்டாகலாம். ஆகவே முட்டாள்தனமான சினிமா வசனங்களை விட்டொழிந்துவிட்டு ஒரேயொரு முறை உலகம்/சமூகம் உங்களை என்னவாக இருக்கச் சொல்லிக் கோருகிறதோ அதுவாக இருந்து பாருங்கள்! லட்சியத்தைக் கண்டடையும் வாய்ப்பை அது ஏற்படுத்தித் தரலாம்.

Rule 8 : Tell the truth. Or, At least, don’t lie.

நம் கண் முன் தோன்றும் அனைத்திற்கும் நாமே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றைக் கற்பதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இளமைக் காலத்தில் வாழ்வின் லட்சியத்தைத் தீர்மானமாகக் கண்டடையவில்லை எனினும், ஏதேனும் ஒரு நோக்கத்தை வைத்தே செயல்பட வேண்டும். நம் லட்சியம் தவறான பாதையில் சென்றால் கடவுள் அதிலிருந்து பாடமளித்து மீட்பார் என நம்ப வேண்டும். உண்மையைச் சொல்லுவதைவிட உண்மையாகச் செயல்படுதல் முக்கியமானது. பிறருடன் சொல்லும் பொய்களைவிட நம்மிடமே சொல்லிக்கொள்ளும் பொய் ஆபத்தானது. எந்தக் கருத்தியல் உடையவராக இருந்தாலும் உண்மையை உரக்கச் சொல்வது அவசியம்; முடிந்தவரையில் பொய் சொல்லாமலாவது இருந்திடலாம்.

Rule 9 : Assume that the person you’re listening to might know something you don’t

தனிமையிலிருக்கும்போது இருவிதமான ஆளுமைகளைத் தழுவி மேற்கொள்வது மட்டுமே உண்மையான சிந்தனையாக இருக்கும் என்கிறார் பீட்டர்சன். இதை விவரிக்கும்போது 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த உளவியல் நிபுணர் கார்ல் ரோஜர்ஸை மேற்கோள் காட்டுகிறார். “நம்மில் பெரும்பாலானோர் கேட்பதில்லை. ஏனெனில் கேட்பது மிகவும் ஆபத்தானது. அதற்கு சில தகுதிகள் வேண்டும். முதற்தகுதி தைரியம். அறிவியக்கவாதியைக் கூர்ந்து கேட்கத் தொடங்கிவிட்டால் நம் கோட்பாடுகளைக் கைவிட்டு எதிர்க்கருத்துக்கு மாறிவிட வாய்ப்புள்ளது. அப்படி மாறினால் மட்டுமே அது நல்ல கேட்டலாக (Listening) இருக்க முடியும். எதிர்க்கருத்தைக் கேட்டுவிட்டு தங்கள் கோட்பாட்டிலேயே நீடித்திருப்பவருக்கு நான் பேசுவது புரியாது”

விவாதங்களில் ஈடுபாடு கொண்டிருப்போருக்குக் கேட்டல் திறன் அவசியம். கார்ல் ரோஜர்ஸ் சொல்வது போல் அவர்கள் முழுமையாக Listener ஆக இல்லாதிருக்கலாம். ஆனால் விவாதம் என்பது எதிரிலிருப்பவனைக் குறைத்து மதிப்பிடுபவனுக்கான களம் அல்ல.

சமூக ஊடகத்திலுள்ள பின்னூட்ட முறையின் வழியாகப் பலரும் எதிர்க்கருத்தை வைக்க ஆவலுடன் இருக்கின்றனர். இந்த அதீத பேச்சு சுதந்திரம், சிந்தையை மட்டுப்படுத்துகிறது. நான் கடந்த 3 ஆண்டுகளில் யாருடனும் பின்னூட்டத்தில் விவாதித்ததில்லை. எதிர்க்கருத்து எழுதி வெற்றுப் பதிவுகளை இட்டதில்லை. அறிவைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டு அல்லது சொல்லப்பட்டிருந்தால் - அந்தத் தூண்டுதல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் - உடனடி ஃபாஸ்ட் ஃபுட் கருத்து சொல்லாமல் அதைச் சோதனைக்கு உட்படுத்துவேன். பின் அதை புதிய சிந்தனையாக உருவாக்கி கட்டுரையாக்குவேன். சிந்தை நிகழும்போது என்னையே முரண்பட்டுக்கொண்டே தீர்மானத்திற்கு வருவேன். பிறரது கருத்தை எப்படிக் கேட்கிறோமோ அதேபோன்ற வேட்டை மனநிலையில்தான் என் கருத்தையும் உள்ளிருந்து கேட்பேன். சிந்தையை வெளிப்படுத்தும்போது சுவாரசியத்தின் பொருட்டு மிகை இருக்கலாம்; பொய் கூடாது. பெரும்பாலான விவாதங்களை ‘சரி, இருக்கலாம், புரிகிறது’ என்று சொல்லி முடிப்பவனாக நானாகவே இருந்திருக்கிறேன். என்னுடன் விவாதித்த பலர் இன்னும் நண்பர்களாகவே நீடிக்கின்றனர் (பெண்கள் விதிவிலக்கு).

Rule 10 : Be Precise in your Speech

பேச்சின் மூலம் உலகத்திற்கு அறிமுகமாகிறார் ஜோர்டன் பீட்டர்சன். அதன் வழியாகவே அவரது புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. பொதுவாகப் பேச்சாளர்களின் எழுத்தும், எழுத்தாளர்களின் பேச்சும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஜோர்டன் வார்த்தைகளின் வாயிலாகவே தன்னை செதுக்கிக்கொண்டதால் அவருக்கு அந்தத் தடை இல்லை. முதன்முதலில் இந்நூலின் 12 விதிகளை வாசித்தபோதும் மேலோட்டமாக இருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால் இவரிடம் சிந்தனைக்கு இணையாக மொழியும் இருக்கிறது.

ஜோர்டனிடம் விவாதித்து யாரும் வென்றதாக வரலாறு இல்லை. ஆண்ட்ரிவ் டேட்டிடமும் இப்படியொரு பண்பு இருக்கிறது. ஆண்ட்ரிவ் பேச்சாளன் இல்லையெனினும், தன் நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் நிற்பவன். அதுவே அவனின் பேச்சுக்கான பலத்தை அளித்துவிடும். ஆனால் ஊடகவியலாளர் பீர்ஸ் மோர்கனிடம் விவாதித்தபோது ஆண்ட்ரிவ் தடுமாறியதை மறுக்க முடியாது. எப்பேர்ப்பட்ட கொம்பனையும் அசைத்துப் பார்க்க நினைப்பவர் பீர்ஸ் மோர்கன். அப்படிப்பட்டவரின் பருப்பே ஜோர்டன் பீட்டர்சனிடம் வேகவில்லை.

ஜோர்டன் பீட்டர்சன் தன் உறுதியாக இல்லாத எதைப்பற்றியும் பேசுவதில்லை. ஆதாரங்களையும் ஆவணங்களையும் திரட்டாமல் விவாதங்களுக்குச் செல்வதில்லை. ஊடகவியலாளர்களின் இடைமறித்தலுக்கு வீழ்ந்ததில்லை. பேச்சில் fillers போடுவதில்லை. உலகின் முன் தன்னை முன்னிறுத்தும்போது கச்சிதமான உடையில் தோன்றுவார். ஆண்ட்ரிவ் டேட் Realist என்றால் ஜோர்டன் பீட்டர்சன் Perfectionist. பூரணவாதம் கோரக்கூடிய அசாத்திய பயிற்சியைக் கொஞ்சமும் மேற்கொள்ளத் தயாராக இல்லாத சோம்பேறிகளால் மட்டுமே பூரணவாதிகளை எள்ளி நகையாட முடியும்.

Rule 11 : Do not bother children when they are skateboarding

‘The Spirit that interferes when boys are trying to become men is, therefore, no more friend to woman than it is to man. It will object just as vociferously and self rightoeusly when little girls try to stand on their two own feet. It negates consciousness. It’s antihuman, desire of failure, jealous, resentful and destructive. If you think tough men are dangerous, wait until you see what weak men are capable of.’


Rule 12 : Pet a cat when you encounter one on the street


155 views0 comments

Recent Posts

See All

コメント


Post: Blog2_Post
bottom of page