top of page
Search
Writer's pictureBalu

டிசம்பர் மாத நாட்குறிப்பு

Updated: Jan 31, 2022

டிசம்பர் 6


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திடீரென ஆபாசப் படங்கள் பார்ப்பதை நிறுத்திவிடலாமென முடிவெடுத்துக் கைவிட்டேன். அன்றிலிருந்துதான் No Fap பயணம் தொடங்கியது. காமம் சார்ந்து இனி நாட்குறிப்பில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் எனது மூளைக்கு ஒரு நல்லது செய்திருக்கிறேன் என்ற எண்ணம் எழுத வைத்துவிட்டது.


இந்தப் பேரிடர் காலத்தில் நிஜ மனிதர்களை அதிகம் சந்திக்காததால் எனது காம எண்ணங்கள் அனைத்தும் ஆபாசப் படங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் வரும் மாடல்களின் புகைப்படங்களைச் சார்ந்தே கட்டமைக்கப்பட்டது. அதில் நிறைந்திருப்பது முழுவதும் பிரம்மாண்டமும் கதைகள் மட்டுமே. ஆபாசப் படங்கள் மற்றும் காமம் சார்ந்த விஷயங்களில் மட்டும் ஒருவன் கதைகளைத் துச்சமெனக் கருத வேண்டிய அவசியமுள்ளது. ஏனெனில் அது உறவைப் பாதித்துவிடக்கூடியது. பெரும்பாலும் மனிதர்கள் புணர்கிறார்; வெறும் புணர்கிறார்கள். அதில் கதைத்தன்மை இருப்பதில்லை; பசி மட்டுமே உள்ளது. காமத்தில் கதைத்தன்மையை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம். மனித வாழ்வில் சினிமாக்களையும், ஆபாசப் படங்களையும் போல அத்தனை உச்சங்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. இந்தச் சாதாரண நிலையிலிருந்து தற்காலிக உச்சத்தைத் தரக்கூடியதுதான் காமம் எனும்பட்சத்தில், அது எழுவதற்கே நமக்கு உச்சத்தைக் கொடுக்கக்கூடிய கதைத்தன்மையை எதிர்பார்த்தல் தகாது.


மூளையைப் பொருத்தவரையில் டோபமைன் சிஸ்டத்தை நாம் பிரக்ஞையுடன் கையாள வேண்டியுள்ளது. நாம் ஆபாசங்களை அதிகம் பார்க்கப் பார்க்க நமக்கு அதிக டோபமைன் கிடைத்துத் திகட்டிவிடும். இது அதிகம் சாக்லேட் சாப்பிடக்கூடிய கதை அல்ல; நிதமும் கை நிறையச் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுக்கொள்ளும் கதை. ‘உண்மையான ஆண்மகன் சர்க்கரைப் பொருட்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள மாட்டான்’ என, ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் மாப்பசான் தனது சிறுகதையில் எழுதியிருப்பார். அதேபோல், உண்மையான ஆண் ஆபாசங்களைப் பார்க்க மாட்டான் என்ற விழிப்பு வந்தவுடன் அதிலிருந்து விலகி விட்டேன்.


பிரம்மாண்டங்களிலிருந்து ஒருவருக்கு அதிக டோபமைன் கிடைக்கத் தொடங்கிவிட்டால் அவனால் சிறு விஷயங்களின் அழகை ரசிக்கவே முடியாமல் போய்விடும். நம் உலகம் சிறு விஷயங்களால் நிறைந்ததுதான். எந்தப் பெண்ணும் ஆபாசங்களில் வருவதுபோல் கவர்ச்சியாக உடையணிந்து எந்நேரமும் கதைத்தன்மையை உருவாக்குவதில்லை; அதேபோல் எந்த ஆணும்… Bla Bla bla. மேலும், ஆபாசங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் மற்றொரு பாதிப்பு என்னவெனில், நடிகைகளின் இன்பக் கூச்சல். பெரும்பாலான பெண்கள் அதுபோல் இன்பக் கூச்சல் போட மாட்டார்கள் எனப் படித்திருக்கிறேன். அனுபவித்தவரையில், பெண்ணின் இன்பக் கூச்சல் ஆபாசங்களில் வருவது போல் அவ்வளவு வீரியமாக இருக்காது. ஒருவன் தொடர்ந்து ஆபாசங்களுக்குப் பழகி அவன் நிஜ காமத்தை எதிர்கொள்வானானால் அவனுக்குப் பெண்ணிடமிருந்து உண்மையாகக் கிடைக்கக்கூடிய வீரியமற்ற மென்மையான இன்பக் கூச்சல் ஏமாற்றத்தையே அளிக்கும்.


ஆபாசங்களில் நினைக்க முடியாத அளவுக்குக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. அக்கதைகளின் எல்லாப் பொறிகளும் நமது நிஜ வாழ்விலிருந்து தொடங்குகின்றன. ஒருவன் அந்தக் கதைகளுக்குப் பழகி விட்டால், வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களிலும் காம எண்ணங்கள் மட்டுமே தோன்றிக்கொண்டிருக்கும். சித்தி, அத்தை, அக்கா தொடங்க சொந்த தங்கை, தாய் வரை இந்தக் கதைகள் ஒருவனைத் தொந்தரவு செய்யும். அதிலிருந்து அவன் வாழ்நாள் முழுவதும் தப்பித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். ஆண் - பெண் பழக்கங்களும் உரையாடல்களும் சகஜமாகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆபாசங்களுக்கு அடிமையாகியிருக்கும் ஒருவனுக்கு தன் மனைவியின்மீது சந்தேக உணர்வு மட்டுமே தோன்றிக்கொண்டிருக்கும். இது உறவைப் பெரிதளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.



டிசம்பர் 22


நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரியைச் சந்தித்தேன். என்னைப் பார்த்து நோ ஃபாப் வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியவன், இன்று என்னை முந்திக்கொண்டு போவதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது. புத்தகத்தின் ப்ரொமோஷன் வேலை நிமித்தமாக அவனைச் சந்திக்கச் சென்றேன். ஆனால் நாங்கள் வேலை செய்த நிமிடங்களைவிட உரையாட நிமிடங்கள்தான் அதிகம். அதேசமயம், மேற்கொண்ட வேலையும் தக்க சமயத்தில் முடிந்திருந்தது.


சமீப காலத்தில் என் வாழ்வில் முக்கியமான நண்பர்கள் எனக் கேட்டாள் மூவரைத்தான் குறிப்பிடத் தோன்றுகிறது; பாரி, விஜய், தீனா. பாரியும் நானும் வாழ்வின் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறோம். அவனிடம் மட்டும்தான் என்னால் Delay Gratificationஐ பற்றி ஆழ்ந்து உரையாட முடியும். பலருக்கும் Delay Gratification என்றால் என்னவென்றே தெரியாது. தெரிந்தாலும், அதைக் கடைப்பிடிப்பதற்கான Commitment அவர்களிடத்தில் இருக்காது. இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு நண்பனாய் இருப்பதற்குப் பதில், ஒழுக்கத்தைப் பற்றிக்கொள்ளும் ஒருவனுடன் இணைந்து பயணிப்பது நிறைவாக உள்ளது. இன்னும் சில நாட்களில் அவன் தொலைந்து போய்விடுவான். இன்மையை எதிர்கொள்ளத் தயாராகிவிட வேண்டும்.




டிசம்பர் 23


சர்வ வல்லமை படைத்த தேவன், எவ்வளவு பெரிய முட்டாளாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் கையில் அவனை ஒப்படைத்திருப்பான்.


சென்ற ஆண்டு நாட்குறிப்பு எழுதத் தொடங்குவதாகச் சபதம் எடுத்துக்கொண்டேன். ஆனால் அது ஓராண்டுக்கான சபதமே தவிர, நித்தியமானதல்ல. வாழ்வில் புத்தாண்டுக்கு நான் எடுத்துக்கொண்ட சபதத்தை ஒழுக்கத்துடன் நிறைவேற்றியுள்ளதாக நம்புகிறேன். இனி எனது மிகத் தீவிர அந்தரங்கங்கள் மட்டும் நாட்குறிப்பில் இடம்பெறும். பிறவற்றை ஃபேஸ்புக்கில் நேரடியாகவே பதிவு செய்ய உள்ளேன். 2022 முதல் நான் எழுதும் அந்தரங்க நாட்குறிப்பை யாருக்கும் படிக்கக் கொடுக்கப்போவதில்லை.


புத்தாண்டுக்கு புதிய சபதம் ஒன்றை எடுத்துள்ளேன். ஆனால் இது நித்தியமான முடிவு. இனி எந்தப் பெண்ணுக்கு அடிபணியக்கூடாது. அதாவது உறவில் பெண்ணிடம் Submissive ஆக இருந்து அவளை Dominate செய்ய அனுமதிக்கக்கூடாது. நானறிந்தவரையில், பெண்களுக்கு உறவில் Dominate செய்யத் தெரியவில்லை. ஆண் - பெண் உறவில் மாஸ்டராக இருப்பவருக்குச் சில கடமைகள் உள்ளன. தனது துணை எவ்வளவு பெரிய Trap சூழ்நிலைக்குள் உறவைக் கொண்டு சென்றாலும் ஆல்ஃபாவாக இருப்பவர், உடனடியாகப் பதற்றமும் சினமுமின்றி அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பித்து, துணையையும் காப்பாற்றி உறவைச் சுமுகமாகக் கொண்டு செல்ல வேண்டும். இதுவே உண்மையான Dominaவுக்கு இருக்கும் கடமை. இதை ஓர் ஆணாக நான் சரியாகவே செய்துவிடுவேன். எக்காரணம் கொண்டும் துணையைக் கைவிட வேண்டும் என்ற மாபெரும் முடிவை நான் அவ்வளவு சீக்கிரம் மேற்கொள்ள மாட்டேன். ஆனால் இந்த டாமினா பதவி ஒரு பெண்ணிடம் இருக்கும்போதும், சூழ்நிலைகள் அவளது கைமீறிப் போகும்போதும் அவள் சலனமடைந்து ஆண் மீது தீராக் கோபம் கொண்டுவிடுகிறாள். இந்தப் பொழுதில் ட்ராப்பிலிருந்து தப்பிப்பதற்குப் பதிலாக அவள் கோபத்தின் மீதும், அந்த ஆணின் சமாதான வார்த்தைகளின் மீதுமே கவனம் செலுத்துகிறாள். இதனால் உறவில் திசையிழக்கிறது. அவளை நம்பி அடிபணிந்ததற்கு அவளால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டாள்.


இது அவளைக் குறை கூறும் குறிப்பல்ல; என்னை நானே குறை கூறிக்கொள்ளும் குறிப்பு. என் புத்தி எங்கே சென்றிருந்தது?





105 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page