திவாகர் என்னிடம் ஒன்றிரண்டு முறை சொல்லியிருக்கிறார். “டிசம்பர் வரை Bulking. ஏப்ரல் வரை Cutting. பிறந்தநாளின்போது ஒரு சிக்ஸ் பேக் போட்டோ. வாழ்க்கையில்
ஒருமுறையேனும் சிக்ஸ் பேக் வைத்து அழகு பார்த்துவிட வேண்டும்”.
ராம் என் பள்ளி நண்பன். ஜிம்மில் காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பான். நான் என்றாவது காலை சென்றால் அவனுடன் சேர்ந்து பயிற்சி செய்வேன். சமீபத்தில் அவன் தனது Abs அயும், 6 மாதங்களுக்கு முன் வைத்திருந்த தொப்பையையும் ஒப்பிட்டுக் காட்டினான்.
திவாகர் உண்மையில் Insipiring ஆன ஆள். அவர் சொல்லும் பல விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே சொன்னது போல அவர் சொன்ன ஒரு சுவாரசியமான சம்பவத்தால்தான் நான் சர்க்கரைப் பொருட்களை உட்கொள்வதையே நிறுத்தினேன். ஆனால் சிக்ஸ் பேக் விஷயத்தில் அவர் சொன்ன வார்த்தைகளைவிட ராமின் Transformation Inpire செய்திருக்கிறது. திங்கட்கிழமையிலிருந்து Abs பயிற்சி தொடங்க இருக்கிறேன். திவாகர் சொன்னது போலவே “பிறந்தநாளின்போது ஒரு சிக்ஸ் பேக் போட்டோ”.
Feb 3 - I'm Grateful for Simbu
Feb 4 - I'm Grateful for My disciplines
Feb 5 - I'm grateful for my colleagues
Feb 6 - I'm Grateful for all the relationships I had
Feb 7 - I’m Grateful for Sivasankaran
Feb 8 - I’m Grateful for Hamza
Feb 9 - I’m Grateful for Sports.
Feb 10 - I’m Grateful for my Perceptions
Feb 12 - I’m Grateful for Suresh
Feb 13 - I’m Grateful for Ben
ஹேமந்தின் அமெரிக்க நண்பர்களைச் சந்தித்தேன். அதில் பெஞ்சமினுடன் நீண்ட நேர உரையாடல் வைத்திருந்தேன். பொதுவாகவே நான் ஆழமான உரையாடல் என்றால் அதிகம் பேசுபவன். ஆனால் நான் பழகியவர்கள் பெரும்பாலும் தமிழ் ஆட்கள்தான். கல்லூரியில் பழக்கம் கொண்ட வட இந்திய நண்பர்களுடன்கூட என்னால் நீண்ட ஆழமான உரையாடல் வைக்க முடிந்திருந்ததில்லை. ஒரே ஒரு இந்தி நண்பனுடன் மட்டும் இளையராஜா இசையைப் பற்றிப் பேசுவேன். சமூக ஊடகங்கள் இருப்பதால் நம் சிந்தனை சார்ந்த அல்லது ஒத்த நண்பர்களைக் கண்டடைய முடிந்தது. என் எழுத்தை ஒட்டிய கேள்விகளும் உரையாடல்களும் எழத் தொடங்கின. ஆனால் இவை அல்லாமல் முற்றிலும் ஒரு புதிய வெளிநாட்டவனைச் சந்தித்து அவனிடம் பேசி, ஏறத்தாழ நான் தற்போது ஆர்வம் கொண்டிருக்கும் விஷயங்களில் அவனும் ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்து பேசும் உரையாடல் அவ்வளவு நிறைவாக இருந்தது.
சினிமாவில் காண்பது போல் அல்ல; பென் தன் காதல் கதையைச் சொல்லும்போது தன்னை Monogamous Person என்றான். “It’s good to be Monogamous than polyamory. People don’t chose polyamory because they have too much love to give; they choose it because they want more attention and sex. Sometimes, It’s good to be an Old School Guy” என்றேன். அதற்கு பென், “நவீன மனிதர்களாக நாம் புதிய விஷயங்களைச் செய்து பார்க்கிறோம். அதிலிருந்து பட்டுத் தெரிந்துகொண்ட பிறகுதான் மக்கள் ஏன் இதை நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நெருப்பு சுடும் என்று தெரியும்தான்; இருந்தாலும் ஒரே ஒரு முறை நான் கைவைத்துப் பார்த்துக்கொண்டு பிறகு அதைத் தொடாமல் இருந்துகொள்கிறேன் என்ற விதமாக, நான் பலதார உறவில் உழன்று பட்டுத் தெரிந்த பிறகே Monogomyஐ தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்றான்.
அவனுடன் Literature, Fitness, Diet, Business, Neuroscience, Relationship எனப் பல விஷயங்களைப் பற்றி உரையாடினேன்.
(பி.கு: தமிழின் நம்பர் 1 எழுத்தாளரின் ப்ளாக்பஸ்டர் புத்தகம்கூட அதிகபட்சம் 10,000 பிரதிகள்தான் விற்பனையாகும் என்றேன். ஆச்சரியமடைந்த ஹேமந்தின் அமெரிக்க நண்பர்கள், “It’s suppose to be sold in millions” என்றனர்.)
Feb 14 - I’m Grateful for All the Love I have given and received
Feb 16 - I’m Grateful for North Indian Men Labors who built our state
Feb 17 - I’m Grateful for Mahathi
Feb 18 - I'm Grateful for the criticism
Feb 19 - I’m Grateful for Zudio
Feb 20 - I’m Grateful for Siva
Feb 21 - I'm Grateful for my mother tongue Tamil
Feb 24 - I’m Grateful for Jeyamohan
“மனிதன் வாசிப்பது மிகவும் அவசியமானது. 2 மணி நேர பாட்கேஸ்டை எழுத்தாக மாற்றி படிக்கும்போது அதை இன்னும் விரைவில் நாம் வாசித்துவிடலாம். குறைந்த நேரத்தில் அதிக அறிவைப் பெறும் வழிதான் வாசிப்பு. உலகின் தலைசிறந்த ஆண்களைப் படியுங்கள்; சிறந்த பெண்களையும்கூட” என்றார் பேராசிரியர் ஜோர்டன் பீட்டர்சன்.
அவர் வலியுறுத்தியது வாசிப்பு என்பதைத் தாண்டி விரைவு வாசிப்பை. அறிவுத் தேடலில் இருப்பவனுக்கு வாசிக்க நிறையவே இருக்கும் என்பதால் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களை அவன் ஓராண்டுக்கு மேல் வைத்துப் பூஜை செய்யவே மாட்டான். விரைவு வாசிப்பு குறித்து ஜெயமோகனும் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ரா, சாரு போன்றவர்களும் தங்களது விரைவு வாசிப்பு குறித்துப் பேசியுள்ளனர். ஆனால் அதை அடையும் வழி என்னவென்பதை யாரும் சொன்னதில்லை. ஒருவகையில் அது பயிற்சியால் அடையக்கூடியது என்றாலுமே அதற்கென ஆரம்பக் கட்ட நுணுக்கங்கள் இல்லாமல் இருக்காது. ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய ஒரு கடிதத்தில் அதற்கான சில நுணுக்கங்களைக் கொடுத்திருந்தார்.
‘சிலர் வரிகள் வழியாக விழியோட்டி வாசிப்பார்கள். அது வாசிப்பை வேகம் கொள்ளச் செய்ய பெரிய தடை. வரிகளின் நடுப்பகுதியை மட்டுமே பார்த்து வாசிக்கவேண்டும். வாசிக்கையில் வாய்க்குள் சொல்லிக்கொள்வது, உள்ளத்துள் சொல்லிக்கொள்வது கூடாது. வாசிப்பதென்பது எழுத்துக்களை பார்ப்பதுதான்.’
இதை முயன்று பார்த்தேன். ஏறத்தாழ 50% வாசிக்கும் நேரம் மிச்சமானது. அந்த நேரத்தில் அடுத்த புத்தகத்திற்குள் நுழைந்துவிடுகிறேன். எத்தனை நாட்கள் வாசிக்கும் சொற்களை மனதிற்குள்ளே சொல்லிப் போகும் தவற்றைச் செய்திருப்பதால், அதைக் கைவிடுதல் கதையைப் புரிந்துகொள்ளும் தன்மையைச் சிதைக்குமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் அப்படிப் பார்வையால் எழுத்தைப் பார்த்துச் சென்று கற்பனை செய்வதில் கவனம் இன்னும் கூர்மையாவதையே உணர முடிந்தது. விரைவு வாசிப்பைப் பயின்றுகொண்டிருக்கிறேன். அதற்கு வழிகாட்டியாக இருந்தமைக்காக ஜெயமோகனுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறேன்.
Feb 25 - I’m Grateful for My mistakes
ஒரு சிறிய பிழை என்னை பெரும்பிழையிலிருந்து காப்பாற்றுகிறது. அதிலிருந்து எனது ஆளுமை காக்கப்படுகிறது.
Feb 26 - I'm Grateful for the work stress and the way I'm handling it.
Feb 27 - I’m Grateful for Thirukkural/Thiruvalluvar
Comments