எனது அடுத்த புத்தகத்தை இதுவரை படித்த ஒரே வாசகன் பாரி. அதை எடிட் செய்யும் பணியையும் அவனே பார்த்திருக்கிறான். அவனுக்கிருக்கும் வேலைகளுக்கும் மத்தியிலும் ஒவ்வொரு வாரமும் இரண்டிலிருந்து மூன்று அத்தியாயங்களைச் சரி பார்த்துச் சொன்னான். வாசிப்பின் இன்பத்தைத் தவிர்த்துவிட்டு இதை ஒரு தீவிர பணியாகச் செய்த அவனுக்கு எந்த வகையில் என் நன்றியுணர்வை வெளிப்படுத்தினாலும் ஈடாகாது.
Jan 4 - I'm Grateful for Shanthanu
Jan 5 - I'm Grateful for 2023
Jan 6 - I’m Grateful for Arumaigiri
Jan 7 - I’m Grateful for my hard times.
கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஜனவரியின் முதல் வாரம் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. கடந்தாண்டு அதைக் கையாண்ட விதத்தைவிட இம்முறை பல மடங்கு பக்குவமடைந்திருப்பதை உணர்கிறேன். 2023லும் கடின காலத்திலிருந்து மேலெழ வேண்டிய அவசியமிருக்கிறது. சுவாரசியம் தொடங்கிவிட்டது!
Jan 8 - I’m Grateful for this Long day
இன்று தினாவின் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. அது முடிந்ததும் நாள் முழுக்க புத்தகக் கண்காட்சி. வழக்கமாக நான் செய்யும் எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க கேளிக்கைக்கான நாளாக இருக்கப்போகிறது. இந்நாள் எப்படி அமையப்போகிறது என்று எனக்கே தெரியவில்லை. சுற்றி நண்பர்கள் இருக்கப்போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். புதுப் படத்தின் கதை தெரியாமல் பார்க்கத் துடிப்பது போல் இந்நாளின் காலைப் பொழுதைத் தொடங்குகிறேன்.
Jan 9 - I’m Grateful for Tamil Literature Society
கடந்தாண்டு ரூ.7000க்குப் புத்தகம் வாங்கிய நான், இம்முறை ரூ.3000க்கு மட்டுமே வாங்கியிருக்கிறேன். அதுவே போதுமானதாக இருக்கிறது. நான் வாங்கியிருக்கும் நூல்கள் வேறு நூலின் வாசலைத் திறந்தால் அவற்றிற்குச் செல்வேன். ராம்ஜியின் Kindness, தசரதனின் மரியாதை, அனுஷின் நலன் விசாரிப்பு, தினகரனின் அன்பு, தீனனின் நட்பு, ஸ்ரீனி - விஜய்யின் நகைச்சுவைக் கதைகள், புதிதாகச் சந்தித்த நண்பர்கள் என நேற்று நடந்த அனைத்திற்கும் எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தத் தோன்றுகிறது.
Jan 10 - I’m Grateful for the Gym partner I Trained with yesterday
Jan 11 - I'm Grateful for Dina
Jan 12 - I’m Grateful for My Breakups
Jan 13 - I’m Grateful for My Sneakers
Jan 14 - I’m Grateful for Megha
Jan 15 - I’m Grateful for Gary Wilson
Jan 16 - I’m Grateful for the decision of Uninstalling Social media Apps which I’ve took on this day last year.
Jan 17 - I’m Grateful for Anton Chekhov
Jan 18 - I’m Grateful for My Parents
Jan 19 - I’m Grateful for My Gym
Jan 20 - I’m Grateful for Deenan
Jan 21 - I’m Grateful for My Sleep
போகன் சங்கரின் ‘மெல்லுடலிகள்’ தொகுப்பை வாசிக்கிறேன். பல கதாபாத்திரங்கள் தூக்க மாத்திரையை நாடுகின்றனர். படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுவது எவ்வளவு பெரிய கொடுப்பினை என இப்போதுதான் புரிந்தது. பலர் இல்லாமல் தவிக்கும் அரிய விஷயம் அது.
Jan 22 - I’m Grateful for My Anna
Jan 23- I’m Grateful for My Demons in my mind
இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் அரக்கக் குணம் மீண்டும் வந்து விடுகிறது. நேற்று காலையிலிருந்து அது என்னை வாட்டியெடுத்தது. 2021ம் ஆண்டில் பலமுறை இப்படி நடந்திருக்கிறது. ஆனால் இப்போது நான் அதை அணுகும் விதம் முற்றிலும் வேறாக இருக்கிறது. அதன் வீரியம் சற்றே சரிந்திருப்பதால் என்னால் அதற்கு என் நன்றியுணர்வை செலுத்த முடிகிறது. அந்த அரக்கக் குணம் இல்லாவிட்டால் என்னால் மீண்டிருக்க முடியாது.
நேற்று என் முன்னாள் காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது “அந்த அரக்கக் குணத்திற்காக நானே உன்னை ஏற்றுக்கொள்கிறேன்; நீ ஏன் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறாய்?” என்று கேட்டாள். ஏற்றுக்கொள்வதற்கு இப்போது எதுவுமில்லை. மன்னிப்பதற்குத்தான் இருக்கிறது. இருந்த அரக்கக் குணத்தையும், லேசாக முளைத்தெழுந்த அரக்கக் குணத்தையும் மன்னிக்கிறேன். என் கடந்த காலத்தை மன்னிக்கிறேன். என்னையே நான் மன்னிக்கிறேன். எல்லாவற்றிற்கும் இரு முற்றுப்புள்ளியும், புதிய தொடக்கமும் வேண்டும். உலகம் கோரும் மிகச்சிறந்த மனிதனாக மாற ஆவலுடன் இருக்கிறேன்.
Comments