top of page
Search
Writer's pictureBalu

அக்டோபர் மாத நாட்குறிப்பு

அக்டோபர் 10

No Fap - One Month

Flatlines. அதாவது சாதாரணப் பொழுதுகளிலும் கூட மனம் மகிழ்வுக்குப் பதிலாகச் சோர்வையும், சோகத்தையுமே தேர்ந்தெடுக்கும். சிறிய சோக நிகழ்வு ஏற்பட்டாலும் அது பஞ்சின்மீது பற்றவைத்த கதை ஆகிவிடும். No Fapல் இருக்கும்போது மனதளவில் தேர்ச்சி பெற வேண்டிய முக்கியமான பாடம் இது. காம உந்துதல்கள் தீவிரமாக இருக்காது. எனினும், சோகத்தில் குடிப்பவர்களைப் போலச் சோகத்தில் அடித்துப் பழகியிருப்போம். அதைச் சோதனை செய்யும் ஒரு நிலைதான் இது. அவ்வளவு எளிதல்ல; இருப்பினும் இந்த ஆற்றைக் கடப்போம்.

அக்டோபர் 17

முன்பெல்லாம் Scandals Porn பார்க்கவே மாட்டேன். அதற்கு ‘லென்ஸ்’ படமும் முக்கிய காரணமெனச் சொல்லலாம். அறத்தின்படி அது தவறாகப்பட்டது. தப்பித் தவறி அது பரிந்துரை பட்டியலில் வந்து, பார்க்க நேர்ந்தாலும்கூட Pornography போல அது இன்பமூட்டுபவையாக எனக்கு இருந்ததில்லை. நீலப்படங்களைப் பொருத்தவரையில், எனக்கு Quality ஆக இருக்க வேண்டும்; கதை இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த Position இருந்தால் இன்னும் கூடுதல் கிக். எனது Porn Consuming உலகம் இதைச் சுற்றியே இருந்தது.

பிறகு ஒருநாள் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவனுக்கு வெளிநாட்டு Porn பார்க்கப் பிடிக்காது எனச் சொன்னான். இந்தியர்களின் Scandalsதான் அவனது தேர்வாக இருந்தது. அதற்கான காரணத்தைக் கேட்டேன். வெளிநாட்டில் எடுக்கப்படுவதெல்லாம் வெறும் Fantasy. அவர்கள் இதற்காகவே தங்களது நடிப்பையும், உடலையும் முன்பே தயார் செய்வார்கள். அதை நமது மூலைக்கு அனுமதித்தால் நமது ஆசைகளும் அதைச் சுற்றியே கட்டமைக்கப்படும். ஆனால் நான் பெண் வேட்கையில் தெருவில் இறங்கினால், யாரும் நான் பார்த்த Fantasy Pornல் உள்ளது போல உடல் வாகுவை வைத்திருக்க மாட்டார்கள்; அந்த நடிகைகளைப் போல முனக மாட்டார்கள் என்றான். ஆனால் இந்திய Scandalsல் யதார்த்தமாக இருக்கும். எனது பக்கத்து வீட்டுப் பெண் போலவே ஒருத்தி காமத்தில் திளைத்தபடியிருப்பாள். அந்தக் காணொளிகளை நான் எனது Dopamine Systemக்கு அனுமதித்தால் நாளைப்பின் நான் அதே போன்ற ஒரு தமிழ்ப் பெண்ணுடன் புணரும்போது எனது Erection System சிறப்பாக இருக்கும் என்றான்.

அறம் சார்ந்த எந்தக் கேள்விகளையும் அவனிடத்தில் முன் வைக்காமல் அவன் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனெனில் இதுகுறித்த எந்தக் கேள்விகளும் எனக்கு இனி ஒருபோதும் எழப்போவதில்லை. நான் அந்த உலகிலிருந்து வெளியே வந்து மாதங்கள் ஆகின்றன. இனி அவ்வுலகம் எனக்கு வேண்டாம்.

ஆனால் ட்விட்டரில் தற்செயலாக சில இந்திய ஆபாசக் காணொளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவை இன்பமளிக்கக்கூடியவையாக இருந்தாலும் என்னைத் திக்குமுக்காடச் செய்யவில்லை; மூழ்க வைக்கவில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்கள் மட்டுமே அதில் செலவழித்திருப்பேன். No Fapல் இருப்பதால் அதனை எளிதாகத் தவிர்க்கும் சுய கட்டுப்பாட்டுக்குப் பழக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த 10 நிமிடங்கள் முடிந்ததும் எழுந்த குற்றவுணர்வு வாட்டியெடுத்தது. வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு குற்றவுணர்வு அவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது. இதனால் ஏற்படும் மகிழ்ச்சிகூட இனி ஒருபோதும் வேண்டாம்.

அக்டோபர் 22

உப்பில்லாத யதார்த்தத்திற்குப் பதிலாகக் கனவில் மகிழ்ந்திருந்த நாட்கள் போய், தற்போது கனவில் தத்தளிக்கும் நாட்கள் வந்திருக்கின்றன. யதார்த்தத்தில் மிகவும் ஒழுக்கமாகவே இருக்கிறேன். நேரத்திற்கு உடற்பயிற்சி, Me time, வேலை, எழுத்து என எல்லாமுமே சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் நான் விரும்பாத சில விஷயங்கள் கனவில் தொந்தரவு செய்துகொண்டிருக்கின்றன.

அக்டோபர் 24

இன்று நானும் இந்தியாவும் எங்களது Streakஐ முடித்துக்கொண்டோம். விராட் கோலி அங்கு முகமது ரிஸ்வானை அணைத்தபடி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார். நானோ இங்குப் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

அக்டோபர் 26

அலுவலஜ்கத்தில் ஒரே செய்தியை 3 முறை தவறாக எழுதியுள்ளேன். ஒவ்வொரு முறையும் அழுத்து எழுதுவதாகப் போயிற்று. கவனம், தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவற்றில் ஒன்று ஏனோ குறைப்பாடாக உள்ளது. கடந்த 45 நாட்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன் என்று இப்போதுதான் புரிகிறது. சற்று நிதானிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.


(இதோ... இந்தப் பத்தியில்கூட எவ்வளவு தவறுகள்)




62 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page