top of page
Search
Writer's pictureBalu

I'm Grateful for July

July 1 - I’m Grateful for the carbohydrates and fat Since Imma bulk from today.
July 3 - I’m Grateful for Saravanan Chandran
July 4 - I’m Grateful for my consistency

நேற்று சேம்-ன் உடற்பயிற்சிக்கூட மெம்பர்ஷிப் முடிந்துவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அட்மினிடம் கேட்டிருந்தேன். ஜூன் 27ம் தேதியே முடிந்துவிட்டதாக சொன்னான். சிறிது நேரம் கழித்து என்னை அழைத்து “உங்களுக்கு இன்னையோட முடியுது” என்றான். அது என்னைச் சீண்டும் வண்ணம் இருந்தது.

“ஏன் இன்னையோட?” என்றேன்.

“நீங்க போன மாசம் மூனாம் தேதி ரெனீவல் பண்ணியிருக்கீங்க”

“நான் முதன்முதலா ஜனவரி 17, 2022 அன்னைக்கு ஜிம்ல சேர்ந்தேன். முறைப்படி 17ம் தேதிதானே எனக்கு முடியணும். போன மாசம் என் கைல காசு கூட இருந்துதேன்னு முன்னவே ரெனீவல் பண்ணிட்டேன். அதுக்காக இந்த மாசம் எனக்கு சீக்கிரம் முடியணுமா?” என விவாதித்தேன்.

“நீங்க 17ம் தேதி சேர்ந்தீங்க, ஒகே. ஆனா எடைல ப்ரேக் எடுத்து மறுபடியும் சேரும்போது எங்க ஃபீஸ் கட்டுனீங்களோ அதுதான் ரெனீவல் டேட்” என்றான்.

“நான் ப்ரேக்லாம் இன்னும் எடுக்கலைங்க”

“ஓ! 2022 ஜனவரில இருந்து இன்னை வர மிஸ் பண்ணாம தொடர்ந்து வரீங்களா? எனக் கேட்டான்.

“ஆமாம்” என்று சொல்லும்போது என்னை மீறி ஒரு திமிர் வெளிப்பட்டிருந்தது.

July 5 - I’m Grateful for my pelvic pain
July 6 - I’m Grateful for my good teaching qualities
July 7 - I’m Grateful for Dhoni
July 8 - I’m Grateful for Haritha
July 9 - I’m Grateful for Vicky
July 11 - I’m Grateful for Adonis School Videos

ஹம்சா ‘அடானிஸ் ஸ்கூல்’ என்ற இணையப் பள்ளியைத் தொடங்கியிருக்கிறான். அதில் பயிலும் மாணவன் ஒருவன் ஹம்சாவின் பேச்சுக்களைக் காணொளியாகப் பதிவு செய்து புதிய சேனலில் பதிவிட்டு வருகிறான்.

நான் யூடியூப் தொடங்கியபோது முதல் காணொளியாக செகாவ் பற்றிப் பதிவிட்டிருந்தேன். அதில் எனது பேச்சு மிக இயல்பாக இருப்பதைக் காணலாம். அதிகபட்சம் நான்கு இடங்களில் மட்டுமே கத்திரி போட்டிருப்பேன். அந்தக் காணொளிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் ஒரு சிலர் தயங்காமல் பேசச் சொல்லிச் சொன்னார்கள். எனவே அடுத்த காணொளியிலிருந்து கத்திரி அதிகமாகப் போட்டேன். அது பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருந்தது. அடுத்த காணொளிகளில் ஒரு வீச்சு இருந்தது. ஆனால் எடிட்டிங் எனது நேரத்தை அதிகமாக உரிஞ்சுகிறது. நான் எதற்காக யூடியூபுக்காக இவ்வளவு உழைக்கிறேன் என்ற கேள்வியை உண்டு பண்ணியது. எடிட்டிங்கிற்காக செலவிடும் நேரத்தை எழுத்துக்காகச் செலவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் மேம்பட்ட எழுத்தாளனாக உருவாகலாமே எனத் தோன்றியது. எனது பலம் எழுத்துதான். நான் வளர்த்துக்கொள்ள நினைக்கும் திறமை பேச்சு. அப்படி இருக்கும்போது எதற்கு எடிட்டிங் எனத் தோன்றியது.

ஹம்சாவின் காணொளியில் அவன் சொன்னவை : நவீன யூடியூப் எராவில் அதிக எடிட் செய்து சினிமா பாணியில் ஒரு காணொளி பதிவிட்டால் அதில் பொய் கலந்திருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். காலம் மாறிவிட்டது. கேமராவை ஆன் செய்துவிட்டு தடையில்லாமல் பேசுபவனைத்தான் மக்கள் நம்புகின்றனர். அதில்தான் உண்மை இருக்கிறது. ஸ்க்ரிப்டை ஒப்பிப்பதில் ஒரு திறமையும் இல்லை.

ஆகவே இனி புதிய முயற்சிகளைச் செய்யப்போகிறேன். எனது பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு கத்திரியை மிகக்குறைவாகப் பயன்படுத்தப்போகிறேன். பேச்சின் வீச்சை சரளமாக்கப்போகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னால் ஒரு கட் கூட இல்லாமல் ஒரு மணி நேரம் பேச முடிந்துவிட்டால் அதுவே மாபெரும் வளர்ச்சி.

July 12 - I’m Grateful for the Simp songs I’ve listened. Also Grateful that I'm not hearing those songs anymore
July 13 - I’m grateful for people who sent me good morning texts. The first good thing I watch nowadays straight from waking up.
July 14 - I’m Grateful for being back to facebook detox. I’ve deleted it from my mobile.
July 15 - I’m Grateful for Gokul that he took a good picture of me
July 17 - I’m Grateful for the Submissive Trait I had Couple of years back

எனது முந்தைய காதல் உறவில் நானே அடிபணிபவனாக இருந்திருக்கிறேன் என்பதை சில இடங்களில் எழுதி வெளிப்படுத்தவும் செய்திருக்கிறேன். எனது நண்பர்களும் எனது முந்தைய உறவைக் கண்காணித்து அதை ஓரளவு கணித்துவிட்டிருந்தனர். அவ்வுறவு முறிந்த பிறகுதான் காதலுறவில் ஆண் அடிபணிபவனாக இருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது புரிந்தது. ஆகவே அதிலிருந்து எனது பாத்திரத்தை மாற்றிக்கொள்ள நினைத்தேன். இப்போது என்னுடன் இருக்கும் பெண்களை ஆள்பவனாக மாறியிருக்கிறேன்.
எனக்கு எப்போதும் போர் வீரர்கள் மீது ஒரு பிரமிப்பு உண்டு. அவர்களின் நிலையை எட்டுவதே உண்மையான பேராண்மை என நினைப்பேன். ஆனால் அவர்களிடமே அடிபணியும் தன்மை உள்ளது. அதிகாரத்தில் அடிபணிவதுதான் போர் வீரனின் முக்கியமான குணாதிசயம். அதன்மூலமே அவன் ஆள்பவனாகிறான்.

July 18 - I’m Grateful for the hatred
July 19 - I’m Grateful for my Body Fat Percentage
July 20 - I’m Grateful for my texting skills
July 21 - I’m Grateful for ‘Baby’ Movie
July 22 - I’m Grateful for my chicks
July 23 - I’m Grateful for the last leg day

பொதுவாக சனிக்கிழமை என்றால் மொத்த உடற்பயிற்சிக்கூடமே கால்களுக்கான பயிற்சியில்தான் ஈடுபடும். ஆகவே கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதை நான் வெள்ளிக்கிழமைக்கு முன்பே முடித்துவிடப் பார்ப்பேன். ஆனால் இந்த வாரம் சில காரணங்களால் அது சனி வரை நீண்டுவிட்டது. எங்கள் உடற்பயிற்சிக்கூடத்திற்கு மாலை ஆறரை மணிக்கு ஒரு கூட்டம் வரும். அந்தக் கூட்டம் முடிந்து எட்டு மணிக்கு அடுத்த ஒரு கூட்டம் வரும். நான் ஆறரை மணிக்குச் சென்று மாஸ்டரிடம் ஸ்குவாட்ஸ் பயிற்சிகளைக் கேட்டறிந்தேன். இதுவரை நீ போட்டிருக்காத பயிற்சிகளை மட்டுமே தருகிறேன். அதை மட்டுமே போடச் சொல்லிச் சொன்னார். எல்லாம் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற கடினமான பயிற்சிகள். எழு மணி வாக்கில் உடற்பயிற்சிக்கூடத்திலிருந்த பாதிப் பேர் ஒரே பயிற்சியைத்தான் செய்துகொண்டிருந்தோம். ஒட்டுமொத்த ஜிம்மே ராணுவ மைதானம் போல ஒரே இசைவில் செயல்பட்டது. பார்ப்பதற்கே அவ்வளவு அற்புதமாக இருந்தது. என் ஜிம்மில் முதன்முறையாக இந்த பேரனுபவத்தை உணர்கிறேன். மாஸ்டர் ஒரு தளபதி போல அனைவரையும் வழிநடத்தினார்.

நான் பயிற்சிகளை முடித்துவிட்டுக் கிளம்பும் முன் “எப்படிடா இருந்துது?” எனக் கேட்டார்.

“கடுமையாக இருந்தது” எனச் சொல்லியிருக்க வேண்டும். “செமண்ணா. ஃபன்னா இருந்தது” என்று உண்மையைச் சொன்னேன்.

July 24 - I’m Grateful for Aswin Guru
July 25 - I’m Grateful for Gokul
July 26 - I’m Grateful for Antony Sir
July 28 - I’m Grateful for Dhanush
July 29 - I’m Grateful for the Financial Scarcity
July 30 - I’m grateful for my dominance trait



45 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page