ஜிம்மில் இருப்பவர்கள் எப்போதும் உயர்தர மனிதர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒருமுறை மாஸ்டர், கஞ்சா அடித்ததற்காக ஜிம் வரும் ஒரு பள்ளி மாணவனை எல்லோர் முன்பும் திட்டிக்கொண்டிருந்தார். “உனக்குக் கிரிக்கெட்டர் ஆகணுமா இல்லை குடிகாரன் ஆகணுமா?” என்று தோனி கேட்கும் தொனியில் இருந்தது அவரது கண்டிப்பு. அதேபோல் அவ்வப்போது சில ஜிம் ப்ரோஸ், “ஜிம் வரதுக்கு முன்னாடி சிகிரெட் புடிச்சுட்டு வரானுங்க, இல்லைன்னா கை அடிச்சுட்டு வரானுங்க. அப்புறம் வெயிட்டு போல மயிறு போலன்னு மட்டும் புலம்புறானுங்க” என்று விரக்தியுடன் திட்டிக்கொண்டிருப்பார்கள். ஆகவே தீய பழக்கங்களுக்கான இடம் இது அல்ல என்பது அப்போது புரிந்தது.
ஜிம்முக்கு ஓராண்டாக வந்துகொண்டிருக்கும் ஒருவன் (மாஸ்டருக்கு நெருக்கமானவன்) கணிசமான அளவில் தன் உடல் எடையைக் குறைத்திருந்தான். பிறரிடம் மாஸ்டர் அவனைச் சுட்டிக்காட்டி, “மனசாட்சியே இல்லாம ஒருநாளுக்கு 20 தம் அடிக்கிறான் டா” என்று கிண்டல் செய்கிறார். அதை அவன் சிரித்துக்கொண்டே கேட்பதைக் கண்டபோது அது உண்மைதான் எனப் புரிந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவன், “அடிப்பாவி, 20 தம்மாடா அடிக்கிற. நான்லாம் 3தான். காலை, மதியம், நைட் ஒன்னு ஒன்னு. என்ன மாதிரி இருடா” என்றான். ஆக, இங்கு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே ஆள் நான்தான் போலும்.
May 4 - I’m Grateful for my habit of reading in mobile
இலக்கியத்தைப் புத்தகப் பிரதியாக வாசித்து மட்டுமே பழக்கம். செல்போன் அதிக கவனச் சிதறல் கொண்ட சாதனம் என்பதால் அதில் வாசிப்பதை விரும்ப மாட்டேன். ஆனால் இப்போது செல்போனில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். கவனச் சிதறல் பற்றி கவலை இல்லை. என் போனில் சமூக வலைதள செயலிகள் இல்லை. அடிக்கடி குறுஞ்செய்திகளும் வராது என்பதால் கவனத்துடன் படிக்க முடிகிறது. புத்தகங்கள் அதிகம் செலவாவது ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது. அதைத் தவிர்க்கும் வண்ணம் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். முடிந்தவரை செல்போனில் படித்துவிட்டு அரிய புத்தகங்களை மட்டும் வாங்கலாம் என்றிருக்கிறேன்.
(பி.கு - வாசிப்பு நிகழும் தளம் அனைத்தும் அதிகாரப்பூர்வமானவை. PDFல் அல்ல)
May 5 - I’m Grateful for not being emotionally dependent
பணியில் செய்த சில பிழைகள் என்னை சோர்வுக்குள்ளாக்கின. அவற்றிற்கு முழு பொறுப்பு நானே என்பதால் அவற்றால் வரும் வசைக்கும் விமர்சனத்திற்கும் தகுதியுள்ளவன் ஆகிறேன்.
காதலுறவில் இருந்தபோது இதுபோல் சோர்ந்துபோன சமயங்களில் காதலியின் விர்ச்சுவல் மடியில் சாய்ந்து புலம்பிக்கொண்டிருப்பேன். ப்ரேக்-அப் ஆன பிறகு எல்லாப் பிரச்சனைகளுக்கும் சுய இன்பத்தை வடிகாலாக ஆக்கினேன். இப்போது அவை எதுவுமே இல்லை. ஒரு பிரச்சனையால் ஏற்படும் விளைவை கூர்ந்து கவனத்து அதிலிருந்து மேலெழும் மேன்மக்களின் செயலைச் செய்துகொண்டிருக்கிறேன். ஆண்மகன் இதைத்தான் செய்ய வேண்டும்.
பிழைகளையும் பிரச்சனைகளையும் விட்டுத் தள்ளுவோம்! எல்லோரையும் போல் சமயங்களில் சோர்வுகளைச் சந்திப்பவன்தான் நானும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இப்படியான சூழ்நிலைகளில் ஒரு பெண்ணின் வாசல் கதவைக்கூட அலைப்பேசியிலோ குறுஞ்செய்தியிலோ தட்டியதில்லை. ஏனெனில், பேராண்மை சார்ந்த எனது பிரச்சனைகளை ஒரு பெண்ணால் தீர்க்கவே முடியாது. என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரே ஆள் நானாக மட்டுமே இருக்க முடியும்!
May 6 - I’m Grateful for my lust feelings
மனதில் ஊறிக்கொண்டிருந்த நாகம் கொஞ்சம் கொஞ்சமாகப் புழுவாக மாறி, பின் எறும்பாக மாறி இப்போதுதான் பட்டாம்பூச்சியாக மாறி வருகிறது. தொட்டத்தில் பட்டாம்பூச்சி வசிப்பது போல் சில எறும்புகள் வசிக்கவே செய்கின்றன.
எல்லாம் காமம் சார்ந்தவை. பொதுவாக எல்லா ஆண்களுக்கும் இருப்பது போல் எனக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பல பெண்கள் மீது காம உணர்வு இருந்தது. அவை அனைத்தும் ஆரோக்கியமானதா என்றால் இல்லை. பிறகு அவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கட்டுப்பட்டு இப்போது வெறும் இரண்டு அல்லது மூன்று பெண்கள் மீது மட்டுமே எஞ்சுகிறது. அவர்கள் மீதான காமம், தோட்டத்தில் உள்ள எறும்புகளையும் கொல்கின்றன. Less is more.
May 7 - I’m Grateful for my Athletic Physique
May 8 - I’m Grateful for Aakash Vijay
May 9 - I’m Grateful for Anitha
May 10 - I’m Grateful for my dream ideal friends
கனவில் எனக்குத் தொப்பை போட்டிருந்தது. சாதாரண தொப்பை இல்லை; உடல்பருமன் ஆகியிருந்தேன். ஓட்டத்திலிருந்தபோது எனது தொப்பை குலுங்குவதைப் பார்த்து நண்பர்கள் சிரித்துக் கிண்டல் செய்தனர். அது என்னை வேதனைப்படுத்தவில்லை; இயல்பாகவே எடுத்துக்கொண்டேன். அவர்களுடன் சேர்ந்து ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டேன். உணவு வேளை முடிந்ததும் அவர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர். கனவில் பலவீனமாக இருந்த என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கருணையே இல்லாமல் நிராகரித்துவிட்டுச் சென்றனர். இதுபோன்ற மனிதர்களால் மட்டுமே சிறந்த நண்பர்களாய் இருக்க முடியும். எப்படிப்பட்ட மனிதர்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்பவர்கள், ஏதோ ஒருவகையில் எதிரிலிருப்பவனைவிடத் தான் மேலானவனாகக் கருதிக்கொள்வான். அப்படிப்பட்ட தந்திரக்காரர்களைவிட யதார்த்தவாதிகள் சிறந்தவர்கள்.
May 11 - I’m Grateful for Sid
May 12 - I’m Grateful for Madhumitha
May 13 - I’m Grateful for the film ‘Good Night’
திடீரென இந்தப் படத்திற்குத் தனியாகக் கிளம்பிச் சென்று கண்ணீர் வடித்துவிட்டு வந்திருக்கிறேன். சமீபத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘டாடா’, ‘குட் நைட்’ போன்ற படங்களைத்தான் பார்க்கப் பிடிக்கிறது.
இதை வெறும் ஃபீல் குட் படம் என்றோ நகைச்சுவை படம் என்றோ கருத முடியாது. ஓர் ஆணின் இன்செக்யூரிட்டி பற்றிப் பேசும் தீவிர நவீனப் படம். நான் உறங்கும்போது குறட்டைவிட மாட்டேன். ஆனால் நாயகனின் அந்த இன்செக்யூரிட்டியை நான் வேறு வடிவில் சந்தித்திருக்கிறேன். இவை ஒரு வகையில் ஆண்களுக்கு மட்டுமே நிகழும் பிரச்சனை. பெண்களுக்கு இதுகுறித்த அலைக்கழிப்பே இருக்காது. சமீபத்தில் நான் அழுத 3 படங்களும் ஆண்களுக்கான பிரச்சனைகளைப் பேசிய படம்.
May 15 - I’m Grateful for my relatives
May 16 - I’m Grateful for my Gym mates
யூடியூபர் சர்வா தனது ஜிம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட காணொளியைப் பார்த்தேன். பலருக்கு ஜிம் எவ்வளவு மோசமான சூழலாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்த ஜிம் சகாக்கள் பலரும் மேன்மையான மனிதர்கள்.
முதல் பாட்கேஸ்டை எப்போது எங்கிருந்து தொடங்கலாம் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஜூன் 12ம் தேதி ஜோர்டன் பீட்டர்சன் பிறந்தநாளில் தொடங்கலாமா என்ற குழப்பம். ஒருமுறை எனது பழைய ப்ளாக் பதிவுகளை எடுத்துப் பார்த்தேன். மே 25 செகாவ் திருமணம் நடந்ததாக நானே ஆவணப்படுத்தியிருக்கிறேன். பாட்கேஸ்ட் தொடங்க அதுவே சிறந்த நாள் என்றும் தோன்றியது. முதலில் சிறிய கால அளவுடன் பிறகு நீண்ட முழுமையான பாட்கேஸ்டை செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.
நடப்பவை அனைத்தும் நல்லதாகவே இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்துக்கே இது பொருந்தும். Self Improvement மூலம் ஒன்றரை ஆண்டுகள் செய்த உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பலனளிக்கின்றன.
May 30 - Since all my family members and friends are happy with it, I’m Grateful that CSK have won the IPL Trophy
Comments