top of page
Search
Writer's pictureBalu

I'm Grateful for March

March 1 - I'm Grateful for Brian
March 2 - I’m Grateful for My self control

நேற்று மாலை ஜிம் போய்விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது எனது சுய கட்டுப்பாட்டை எண்ணி பெருமிதம் கொண்டேன். திடீரெனத் தோன்றிய எண்ணம். குறிப்பாக பாலியல் இச்சைகள் சார்ந்த சுய கட்டுப்பாட்டைப் பற்றிய பெருமிதம் அது.

‘ஆண்கள் அழுவதில் தவறில்லை, அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். தங்களுடைய மோசான பாதிப்புகளையும் (vulnerable), அதன் இருண்ட பக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டும்’ என்று முற்போக்காளர்கள் இணையத்தில் சொல்லிப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, ஆண்களைக் கொஞ்சமும் புரிந்துகொள்ள எத்தனிக்காத பெண்கள் இதைச் சொல்வது வழக்கம். இதுபோன்ற கருத்துகளை ஆண்கள் கண்டுகொள்ளக்கூடாது!

ஓர் ஆணுக்கு உணர்ச்சிகள் சார்ந்த கட்டுப்பாடு (Emotion control) இருந்தே ஆக வேண்டும். அழுகையை அடக்கத் தெரியாதவனால் சிறந்த வீரனாகவும், கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனால் நல்ல தலைவனாகவும், மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனால் உழைப்பாளியாகவும் இருக்க முடியாது. இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

நான் மதிக்கும் அதியற்புத ஆண்களில் ஒருவரான ஜோர்டன் பீட்டர்சன், அடிக்கடி அழக்கூடியவர். ஆனால் அவர் அழுவது சொற்ப விஷயங்களுக்காக இருக்காது. உலகிலுள்ள ஆண்கள் தங்களை நேர்த்தியான முறையில் மேம்படுத்திக்கொள்ள முடியாமல் போன துயரை எண்ணிக் கண்ணீர் வடித்திருக்கிறார். ஒட்டுமொத்த ஆணினத்திற்கான கண்ணீர் அது. டாஸ்டயேவ்ஸ்கி வடிப்பது இதுமாதியான கண்ணீரைத்தான். அவர்கள் தங்களுக்காக அழுவதில்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேர்ந்தே அழுகின்றனர். துயர் மிகுந்த பாத்திரங்களை எழுதியிருந்தாலும் பேராண்மை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக டாஸ்டயேவ்ஸ்கி கருதப்படுவதற்கு இதுவே காரணம். இதுபோன்ற அழுகை தவிர்க்க முடியாதது; சுயநலமற்றது.

அதேபோல்தான் மகிழ்ச்சியும்; மகிழ்ச்சி குறித்த வரையறை தனிமனிதனுக்கிடையே மாறுபடுகிறது. என்னால் ஒன்றுமே இல்லாமல் (காரணமற்று) மகிழ்ச்சியாக இருக்க முடியும். பலருக்கு இது சாத்தியமில்லை.

கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் பல மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் தெரிந்திருக்கும். ஒருவனைச் சரியாகச் சிந்திக்கவிடாமல் தடுக்கும் மிருகம்தான் ‘கோபம்’. பல ஆண்கள் இதை வீரத்தின் அடையாளம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அது அப்படி அல்ல. என்னால் ஒருவனை அடிக்க முடியும். ஓர் உயிரைக் கொல்லவும் முடியும். வசைச் சொற்களால் பிறரைக் காயப்படுத்தும் வல்லமையும் படைத்தவன் நான். ஆனால் இதை எதையுமே செய்யாமல் இருப்பதுதான் உணர்ச்சிகள் சார்ந்த கட்டுப்பாடு. இது ஒருவனை மிகப்பெரிய இடங்களுக்கு இட்டுச்செல்லும் ஆளுமைப் பண்பு.

இதையெல்லாம்விட ஆண்களுக்கு பாலியல் கட்டுப்பாடு மிக மிக முக்கியம். நேற்று கோணங்கியின் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டைப் பார்த்தவுடன் முதலில் தோன்றியது இதுதான். எனக்குத் தோன்றியவற்றை ஜெயமோகன் இன்னும் நேர்த்தியாக எழுதியிருந்தார் :

‘கலைஞனின் மனம் இருளுக்குள்ளும் ஒளிக்குள்ளும் மாறிமாறிச் செல்வது. அவனால் கட்டுப்படுத்தப்பட இயலாதது. நுண்ணுணர்வு என்பது நேர்நிலையிலும் எதிர்நிலையும் செயல்படுவதுதான். பாலுணர்வு என்பதுக் கலைஞர்களிடம் ஒரு நோய்க்கூறாகவே ஆகக்கூடும். அவ்வியல்பை கருத்தில்கொண்டே அவனை, அவன் கலையை அணுகவேண்டும். அதற்குமேல் சொல்ல ஏதுமில்லை.

நான் ஓர் எழுத்தாளனாகவே இதைச் சொல்கிறேன். என் அக- புற நடத்தையை இதுவரை முற்றிலும் கட்டுப்படுத்தியே வந்துள்ளேன். பொதுக்களத்தில் ஒழுக்க எல்லைகளை நான் கறாராகப் பேணுவது என் படைப்பியக்கம் அதனால் பாதிக்கப்படலாகாது என்பதனால்தான். ஆனால் நான் ஒழுக்கவாதி அல்ல. ஒழுக்கத்தை மாறாநெறியாக நான் முன்வைப்பதுமில்லை.’

ஆக, எல்லா ஆண்களும் எல்லா உணர்ச்சிகளையும் எதிர்கொண்டே ஆவார்கள் எனும்பட்சத்தில், அவ்வுணர்ச்சிகளை யாருக்கு நேர்த்தியான முறையில் கையாளத் தெரிந்திருக்கிறதோ அவர் மட்டுமே மேம்பட்ட ஆண் என்று தன்னைச் சொல்லிக்கொள்ள முடியும்.

உணர்ச்சிக் கட்டுப்பாடு இல்லாத ஆண்கள்தான் Rapist-ஆக இருக்கின்றனர். உணர்ச்சிக் கட்டுப்பாடற்ற ஆண்கள்தான் சிறையிலிருக்கின்றனர். உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாதவர்கள்தான் குடிகாரர்களாக இருக்கின்றனர். சாதாரண Stress-ஐ கூட கையாளத் தெரியாதவர்கள் Chain Smoking செய்கின்றனர். ஆகவே, ‘Stereotype-ஐ உடைத்து ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும்’ என்று உளறுவதை Woke பெண்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

March 3 - I'm Grateful for My Masculinity

ஆண்கள் சிறந்து விளங்குவதால் ஒரு விருதும் கிடைக்கப்போவதில்லைதான். ஆனால் பணிச்சூழல், பொதுவாழ்வு, இல்லற வாழ்வு என ஏதேனும் ஓரிடத்தில் அடிசறுக்கினால் புறக்கணிக்கப்படுவது உறுதி. ஆகவேதான் மூச்சுமுட்ட ஆண்பாலுக்காக மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேன்.

மனித நடத்தை மற்றும் சிந்தையின் ஒவ்வொரு அசைவிலும் இருபாலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அறிவியலும் இதைத்தான் சொல்கிறது. அப்படியிருக்கும்பட்சத்தில் ‘இருபாலுக்கும் இது பொருந்தும்’ என்று என்னால் எதையும் பொதுப்படையாக எழுத முடியாது; அப்படி எழுதவும் விரும்பவில்லை. பெண்களை Emotion Control பின்பற்றச் சொல்வது சாத்தியமே இல்லை; அவர்கள் சிந்திப்பதே உணர்ச்சிகளால்தான்.
எனது நண்பன் ஒருவன் சொன்ன தியரி இது. ஆதித்த கரிகாலன் வாழ்வில் ஒரே ஒரு துயரத்தைத்தான் சந்தித்திருக்கிறான். அதிலிருந்து அவன் வீழாமல் அதைக் கடக்க Hyper Masculinityஐ தேர்ந்தெடுத்திருக்கிறான். நான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு என் வாழ்வில் அப்படியான ஒரு துயரே காரணம். மேலும், இனி எனது பாதை (அடுத்த சில ஆண்களுக்கு என்றும் சொல்லலாம்) இதை நோக்கியே இருக்கப்போகிறது.

March 4 - I’m Grateful for Sam
March 5 - I’m Grateful for Babu
March 6 - I’m Grateful for my Clothes

கடந்த ஓராண்டில் உடைகள் மீது ஆர்வம் உயரத் தொடங்கியது. கடந்தாண்டின் கடைசி இரு மாதங்களில் 50% ஊதியத்தை உடைகள் வாங்கவே செலவிட்டிருப்பேன். ரெசஷன் காரணமாக இப்போது அவற்றைக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். கோடையிலும் குளிரிலும் இயல்பாகவே உடைகள் மீதான ரசனை மாறுபடும். குளிர்காலத்தில் ஹூடி, ஸ்வெட்ஷர்ட், ஜூன்ஸ், சீனோஸ், ஷூஸ் போன்ற உடைகளின் மீதே ஆர்வம் அதிகரித்தது. இப்போது கோடையில் Relaxed Fit shirts, Oversized T Shirts, Joggers, Cargo Pant போன்ற உடைகளை மனம் நாடுகிறது. பிறந்தநாள் மாதத்தில் மொத்தமாக அள்ளிவிடலாம் என்று காத்திருக்கிறேன். அதேபோல் நன்றாக உடை அணிபவர்களைத் தவறாமல் பாராட்டிவிடுகிறேன்.

March 7 - I’m Grateful for the movie ‘Triangle of Sadness’

பல நாட்களுக்குப் பிறகு ஓர் அட்டகாசமான படத்தைப் பார்த்தேன். 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த இப்படத்தின் முதல் பாகமே கார்ல் - யாயா என்ற காதல் ஜோடியின் டின்னர் டேட் காட்சி. டேட்டுக்கு யார் பணம் கொடுக்க வேண்டும் என்ற உரையாடல் வருகிறது. ஒவ்வொரு வசனமும் கண்ணிவெடி. இருவர் பேசும் விஷயங்களுமே சரி எனப்பட்டன; அதுவே ஒரு நல்ல எழுத்துக்கான அறிகுறி. டேக்ஸி ஓட்டுநர் சொல்லும் வசனம் இன்னும் அபாரம். “நீ அவளோட சண்டை போடணும். இல்லைன்ன அவளுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டி வரும்”
March 8 - I'm Grateful for the only woman in my life who never complained about raising, working, cooking, cleaning and taking care of the family.
Match 9 - I’m Grateful for people who gets out of my life.
March 10 - I’m Grateful that Abilash is pointing out some important men issues in Mainstream media
March 11 - I’m Grateful for the film ‘Dada’
March 12 - I’m Grateful for my excitements
March 13 - I’m Grateful for my aggression
March 14 - I’m Grateful for the lady who served me a food
March 15 - I’m Grateful that I used to read Manush poems then and I’m unreading his poems now.
March 16 - I’m Grateful for the undisturbed deep rest
March 17 - I’m Grateful for my dreams
March 18 - I’m Grateful that I was promoted at the right time
March 19 - I’m Grateful for Darshan
March 20 - I’m Grateful for my damages
March 23 - I’m Grateful for Gym bro Aakash
March 24 - I’m Grateful for Goutham
March 25 - I’m Grateful for my work load
March 27 - I’m Grateful that Sivaraman uncle has fixed my AC
March 28 - I’m Grateful that Sathish helps me find my order
March 29 - I’m Grateful that all the happening plans and cancelled plans




62 views0 comments

Recent Posts

See All

Comentários


Post: Blog2_Post
bottom of page