Rudhra, a pianist who suffers from porn addiction due to this he couldn't able to concentrate on his practice sessions for the big event which was going to happen in few weeks, he tries to overcome the addiction with another addiction which makes him to fall in a bottomless pit due to this his love, friendship, music is affected and he loses himself in the delusional world, the pain, confusion, suffering, helplessness of Rudhra is wonderfully written.
This novel deals with the current problem in society which seek only pleasure, and which doesn't take care of their own body. There were many disputes in the characters for me personally, the author made a Mould and tried persuading through the charters preaching, to fit inside it the mold.
Personal question review below.
Apart from the darkness of porn and consequence of porn addiction, the story is gender biased, it normalizes patriarchy and spread hatred towards women. Personally, I feel like, the character Rudhra is like trying to shed all the love in life, it reminds me of the character Rudhra from 'Naan Kadavul'. I can understand the pain gone through by Rudhra, and the character may need this way of life, but the world doesn't. I am against porn and porn industry but not women. Not here to argue, I have seen your videos I will agree few but not overall, just want to know your opinion for the review.
Siva.
***
வணக்கம் சிவா,
‘சொனாட்டா’ நாவல் பற்றிய உங்களுடைய விமர்சனம் பல்வேறு பார்வைகளை முன்வைக்கிறது. தலைமுறை மாற்றத்தை முன்வைத்த இந்நாவலைப் பாராட்டிய அதே நேரத்தில் இதிலுள்ள முரண்களையும் முன்வைத்தீர்கள். இந்த விமர்சனம் இந்நாவலுக்குப் புதியதல்ல; ஏற்கெனவே வாசகர்களால் வைக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இந்த நாவல் பெண் வெறுப்பைப் பேசுகிறது என்ற உங்களின் கருத்தை மட்டும் நாவலாசிரியனாகக் கடுமையாக மறுக்கிறேன். இப்படியொரு கருத்தைக் கேட்டும் அமைதி காக்கிறேன் என்றால் அதை நான் ஏற்கிறேன் என்றே அர்த்தமாகும்.
இந்த நாவலில் பல்வேறு கதாபாத்திரங்கள் உரையாடலை முன்னெடுக்கின்றன. அது பலம், பாலினம், காமம், காதல், லட்சியம் சார்ந்த பல்வேறு உரையாடல்களாக விரிகின்றன. அப்படியிருக்கும்போது இங்கு லட்சியவாதத்தைத் தவிர எதுவுமே ஆசிரியனின் குரலாக இருக்க முடியாது. காதல், காமம், பாலினம் சார்ந்த அரசியல் நிலைப்பாடு என்பது ஒவ்வொரு குறுகிய காலத்துக்கும் அனுபவத்தின் பொருட்டு மாறுபட்டுக்கொண்டே இருக்கக்கூடியது. நான் எனது காணொலிகளில் பேசிய கருத்துகளை இப்போது ஏற்பேனா என்றால் மாட்டேன். ஏனெனில், அக்கருத்துகளை முன்வைத்ததன் வழியாக நான் வேறொன்றை நோக்கிச் சென்றிருப்பேன். ஒருவன் ஒரு கருத்தை வைப்பதற்காகக் காலம் முழுவதும் அவன் அதையே தொற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் புனைவு என்பது பல்வேறு பார்வைகளை வைத்து உரையாடுவதற்கான களம்.
ஒருவர் இதைப் பெண் வெறுப்பு நாவல் எனலாம். மற்றொருவர் இந்நாவலின் பெண்கள் புத்திசாலிகளாக இருக்கின்றனர் என்கிறார். ருத்ரா தனக்கு அடிமையாவதை மானசி நிராகரிக்கும் இடத்திலேயே அவள் லட்சிய பெண்ணாக உயர்கிறாள் எனும் பார்வையும் வந்திருக்கிறது. ஆசிரியனாக இவை இரண்டுக்குமே நான் பொறுப்பேற்க முடியாது. ஏனெனில், இவை எதுவும் நான் உத்தேசித்து எழுதியதல்ல. புனைவில் கதாபாத்திரங்கள் அவர்களாகவே வளர்வார்கள். உதாரணமாக, லட்சியவாதியாக இருந்த சிறில் கடைசியில் நெருங்கிய நண்பனுக்கே துரோகமிழைக்கிறான். எந்தவித முன் தீர்மானங்களும் இல்லாத ருத்ரா, ஓரிடத்தில் சிறில் மயிர் நிறச்சாயம் அடித்த காரணத்துக்காகவே அவனை மேலும் வெறுத்து ஜட்ஜ்மெண்டலான ஆளாக மாறுகிறான். பிறர் பூசும் மயிர் நிறச்சாயம் ஒருவனைத் தொந்தரவு செய்கிறதெனில் அவன் மனதில் எவ்வளவு இறுக்கம் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். மைதானம் இதிலிருந்து அவனைத் தளர்த்துகிறது. இவை எதுவுமே உத்தேசித்து எழுதப்பட்டவை அல்ல. நாவலை அப்படி எழுதவும் முடியாது. அது தன்னிச்சையாக நிகழ்வது.
இப்படிப்பட்ட ஜட்ஜ்மெண்டலான மாந்தர்கள்தான் நம்மூரிலும் அதிகம் இருக்கிறார்கள். நான் உட்பட. ஒரு நாவலாசிரியனாக நான் அவர்களை விமர்சிக்கவோ குறைகூறவோ மாட்டேன். அப்படிச் செய்வது எழுத்தாளனின் பணியும் அல்ல; மயிர் நிறச்சாயம் அவனை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்கிற கேள்வி மட்டுமே என்னிடத்தில் இருக்கிறது. ஒரு மனநல ஆலோசகராக அவனை அதிலிருந்து என் எழுத்தின் வழியே தளர்த்தப் பார்ப்பேன். அல்லது பாதிரியாராக மாறி அவனை மன்னிப்பேன். அப்படித்தான் பல கணங்களில் என்னையே நான் மன்னித்துக்கொண்டேன்.
ஓர் ஆபாசப் பட அடிமைக்குப் பெண் வெறுப்பு கொஞ்சமும் துளிர்விடவில்லையெனில் அது நாவலுக்குத் தர்க்கப்பிழையாக அமைந்திருக்கும். ஆகவே உரையாடல் வழியே தோன்றும் கருத்துகள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல; அது வாசகரைச் சிந்தனையை நோக்கி மட்டுமே இட்டுச்செல்ல வேண்டும். (எந்தவொரு நாவலுக்கும்) தீர்மானங்களை நோக்கி அல்ல. ‘இந்த நாவல் பெண் வெறுப்பைப் பரப்புகிறது’ என்ற உங்களது விமர்சனத்தைத் தவிர உங்களின் எல்லா முரண்களையுமே ஏற்கிறேன்.
Comments