உலகளவில் அதிக சலசலப்பை உண்டாக்கிய ஒரு புத்தகம் எனில் அது ‘The 48 Laws of Power’ நூல்தான். பொதுவாக சமூக வலைதள சரிநிலை என்பது அதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதுதான். நடைமுறையில் உலகளவிலும்கூட இதுவே அரசியல் சரிநிலையாக கருதப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதிகாரத்தை ஊக்குவிக்கும் இந்நூலுக்கு மக்கள் ஆர்வம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இது Socio - Political அதிகாரத்தைப் பேசும் நூல் அல்ல; தனி மனிதன் மீது செலுத்தும் அதிகாரம். ஓர் அறையில் இரண்டு பேர் இருந்தால் இருவருமே சமமாக இருக்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு முற்போக்கு முகமூடியை அணிந்தபடிதான் திரிகின்றனர். ஆனால் அந்த யதார்த்தத்தை இந்நூல் மீது மக்கள் காட்டும் ஆர்வம் வெளிப்படுத்திவிட்டது.
‘ஆல்ஃபா ஆண்’ என்ற கான்செப்ட் மீது நம்பிக்கை இருக்கும் ஆண்களால் இப்புத்தகம் பரவலாகப் படிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. ‘ஆல்ஃபா ஆண்’ மீது நம்பிக்கை அற்றவர்கள் கூட இந்நூலைப் படிக்க விரும்பினர். காரணம், இதிலுள்ள விதிகளை யாரும் தம் மீது பயன்படுத்தாமல் நம்மை அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வு. ஆகவே இது ஆபத்தான புத்தகமாகக் கருதப்பட்டது. சிறைச்சாலைகளில் இந்நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒருவர் ரேப் பாடலே பாடியுள்ளார். ஒரு நூலைச் சுற்றி இவ்வளவு சலசலப்பு இருப்பது எதை வெளிப்படுத்துகிறது. சமூக அந்தஸ்தில் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற மக்களின் ஆர்வம்தான்! உண்மையில் இந்நூல் உதவிக்கரமானதா?
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் க்ரீனுடன் ஜோர்டன் பீட்டர்சன் ஒரு பாட்கேஸ்ட் செய்திருப்பார். “ஒரு எழுத்தாளராக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தை எல்லோரும் Manipulative என முத்திரை குத்துகிறார்களே!” என ஜோர்டன் பீட்டர்சன் கேட்பார். அதற்கு க்ரீன், “இந்நூலின் சில விதிகள் Manipulative ஆகத்தான் இருக்கும். முதலில் அதிகாரத்தைப் பற்றிய எனது அபிப்பிராயத்தைக் கேளுங்கள். அது அரசியல், போர் சார்ந்த அதிகாரம் அல்ல; முழுக்க முழுக்க தனி மனித அதிகாரம் சார்ந்தது. அப்படியான அதிகாரத்தன்மை இல்லை என்றால் சமூகத்தில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ளவே முடியாது. உங்கள் பிள்ளையிடம், மனைவியிடம், சக பணியாளரிடம், பொதுமக்களிடம் அதிகாரத்தைச் செலுத்த முடிந்தால்தான் உங்களால் நல்ல தலைவனாக இருக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் இது அவசியமாக இருக்கிறது. நடைமுறையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில், இவை அனைத்தும் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும். நான் ஏகப்பட்ட சுய முன்னேற்ற நூல்களை வாசித்திருக்கிறேன். அதில் சொல்லப்பட்டிருக்கும் எதையும் எனது நிஜ வாழ்வில் எதிர்கொண்டதே இல்லை. அந்நூல்கள் முழுக்க முழுக்க போலி பாசிட்டிவிட்டியைத் தருகின்றன. ஆனால் மனிதர்கள் அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், வஞ்சிக்கக்கூடியவர்கள். இந்த யதார்த்தத்தை ஒரு நூலாகத் தொகுக்க நினைத்தேன்” என்றார்.
இதிலுள்ள 48 விதிகளைவிட இதன் முன்னுரை சுவாரசியமானது. ‘உணர்ச்சிவசப்படுதல் என்பது அதிகாரத்திற்கு எதிரானது. உணர்ச்சியின் மூலம் உண்டாகும் தற்காலிக இன்பத்தைவிட அதனால் ஏற்படும் விளைவு கொடூரமானது. ஒருவர் அவசியம் கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சி எனில் அது கோபம்தான். நீங்கள் ஒருவரை எதிரியாகக் கருதினால் அவரைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அவருடன் நட்பு பாராட்டுவதே சிறந்தது. கோப உணர்ச்சியை அல்லது காதலுணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது கடினம். அவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் கவனம் வேண்டும்’ என்கிறார் ராபர்ட் க்ரீன்.
Law 2: Never put too much trust in friends, learn how to use enemies
நண்பர்கள் எளிதாகப் பொறாமைப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்களை முழுமையாக நம்பிவிடக்கூடாது. மாறாக, ஒரு நல்ல எதிரியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவன் உண்மையாக இருப்பான். ஏனெனில் அவனுக்கு உங்களிடம் நிரூபிப்பதற்கு நிறையவே இருக்கிறது என்கிறார் க்ரீன்.
Law 4: Always say less than necessary
அதிகம் பேசும்போது அதிகம் உளறுவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகம் பேசினால் அதிகாரத்தை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
Law 6: Court attention at all costs
ஓர் உதாரணம் தருகிறேன். அலுவலகத்தில் தலைமையிலிருப்பவரால் சந்தேகத்தின் பொருட்டு ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கான பதில் தெரிந்தும் அமைதியாக இருந்தால் உங்களுக்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் பறிபோகலாம். அதே பதிலை தைரியமாகச் சொல்லும் வேறு ஒருவன் கவனிக்கப்படலாம். நடைமுறை காலத்தில் ஒருவரது கவனத்தை ஈர்ப்பதுதான் மிகவும் கடினமானது.
Law 7: Get others to do the work for you, but always take the credit
Law 8: Make other people come to you, use bait if necessary
Law 9: Win through your actions, never through argument
‘Baby’ படத்தைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான பெண்களை டேட் செய்யக்கூடாது என்று 10 புள்ளிகளைத் தொகுத்துப் பதிவிட்டிருந்தேன். வோக் ஆண்கள், பெண்கள் எனப் பரவலாக அந்தப் பதிவை எதிர்த்தனர், கிண்டல் செய்தனர். ‘இவ்ளோ கண்டிஷன்ஸ்லாம் போட்டா எந்தப் பெண்ணும் கிடைக்க மாட்டா’ என ஒரு பெண்ணும், ‘Better Never Date a Girl’ என இன்னொரு பெண்ணும் பின்னூட்டமிட்டிருந்தனர். யதார்த்தம் என்ன தெரியுமா? கடந்த மாதத்தில் மட்டுமே 5 டேட் சென்றுவிட்டேன். என் வாழ்வில் நான் அதிக டேட் சென்ற ஒரு மாதம் எனில் அது ஜூலை 2023தான். அந்தப் பெண்களுக்கு நான் எந்த பதில் பின்னூட்டமும் இடவில்லை. மாறாக…,
Law 10: Infection: Avoid the unhappy or the unlucky
சென்னையின் மிக அற்புதமான இடத்திற்கு டேட் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் துணை துயரத்தைத் தழுவுபவராக இருந்தால் அந்நாள் நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். அதே நபர் வாழ்வில் தனக்குக் கிடைத்த எல்லாவற்றிற்காகவும் Grateful ஆக இருந்தால் நிச்சயம் அது சிறந்த டேட்டாக முடியும். இதே ஆகஸ்ட் மாதம் 2022ல் நான் ஒரு பெண்ணுடன் டேட் சென்றிருந்தேன். சரியான அழுமூஞ்சி அவள். அந்நாள் நன்றாக முடிவடைய வேண்டிப் பல சாகசங்களைச் செய்துகொண்டிருந்தேன் நான். அவள் வானத்தைப் பார்த்துத் தன் துர் நிகழ்வுகளை எண்ணி என்னிடம் தன்னை ஒரு கவித்துவ பெண்ணாகக் காட்டிக்கொள்ள முயன்றாள். போதும்டா சாமி என்றாகிவிட்டது. அத்தோடு இதுபோன்ற அழுமூஞ்சிகளை டேட் செய்யவே கூடாது என முடிவுசெய்துகொண்டேன்.
Law 11: Learn to keep people dependent on you
Law 14: Pose as a friend, work as a spy
Law 16: Use absence to increase strength and honor
Law 19: Know who you’re dealing with, do not offend the wrong person
ஆபத்தான சூழ்நிலையில் தெருவில் ஒருவருடன் சண்டையிட நமக்குத் தேவையான முதல் தகுதி என்ன தெரியுமா? நல்ல தடகள வீரராக இருக்க வேண்டும். சண்டையில் ஒருவரை அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குக் கூட்டம் சேரும்போது ஓடுவதும் இன்றியமையாதது.
Law 20: Do not commit to anyone
Law 25: Re-Create Yourself
Law 30: Make your accomplishments seem effortless
Law 36: Disdain things you cannot have, ignoring them is the best revenge
Law 38: Think as you like but behave like others
இது சமீபமாக நான் பயன்படுத்தத் தொடங்கிய விதி. என் நண்பன் ஒருவன் சொல்லிக்கொண்டே இருப்பான், “நீங்க மாஸ்குலினிட்டி பத்தி அதிகம் வெளியே பேசாதீங்க. அந்த சொல்லைக்கூட உச்சரிக்கவோ எழுதவோ செய்யாதீங்க. வெறும் வாழ்க்கைமுறைல மட்டும் அது இருக்கட்டும். நம்ம யோசிக்கிறது, பேசுறதுலாம் வெளிய இருக்கிற ஒரு பெருங்கூட்டத்துக்கு முட்டாள்தனாத்தான் தெரியும். அவங்க முன்னாடிலாம் நம்மள நிரூபிக்க நினைச்சா நம்ம நேரம்தான் விரயம்”. இதை ஓராண்டுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறான் அவன். இப்போதுதான் இதை நடைமுறைப்படுத்தும் எண்ணம் வந்தது. அதனால்தான் யூடியூபில் அவ்வளவாகக் காணொளிகளையும் பதிவிடுவதில்லை.
Law 41: Avoid stepping into a great man’s shoes
Law 46: Never appear too perfect
Comments