எழுத்துலகில் செயல்படுபவர்களுக்குக் கடும் உடற்பயிற்சி அவசியம் என்று நம்புபவன் நான். உடற்பயிற்சி செய்யத் துவங்கியதற்கு முன்பிருந்தே இந்த நம்பிக்கை இருந்ததால்தான் ஃபிட்னஸ் உலகில் சோம்பலும் சாக்குப்போக்குகளுமின்றி நுழைய முடிந்தது. என்னிடமே நானே மெச்சும் விஷயங்களில் சில Discipline & consistency. எழுத்தாளர்கள் மட்டுமல்ல; அனைத்துக் கலைஞர்களும் கடும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டுமென்பது என் கருத்து. கலைஞன் என்ற சொல்லை நியாயப்படுத்தும் வகையில் கலைப் படைப்போர் அரிதாகவே உள்ளனர். அவர்கள் நீண்ட காலம் கலை படைக்க வேண்டிய தேவையிருக்கிறது. இளைஞனின் கலைக்கும் முதியவரின் கலைக்கும் உள்ள வித்தியாசங்களை, அணுகுவோரால் உணர முடியும். இரண்டுமே உலகிற்குத் தேவை. அது ஒரே நபரிடம் கிடைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனவேதான் கலைஞர்கள் உடலைப் பேண வேண்டும்.
பொதுவாகச் சராசரிகளைக் கண்டால்கூட உடற்பயிற்சி செய்யச் சொல்லி வலியுறுத்துவதுண்டு. கடுமையான பயிற்சிகள் பற்றி வாய் திறக்க மாட்டேன். “முடிந்தவரை ஒரு மணி நேரமாவது நடந்து செல்லுங்கள்” என்பேன். ஜெயமோகன்கூட உடற்பயிற்சியைப் பற்றி எழுதும்போது நடையைத்தான் அறிவுறுத்துகிறார். ஜெயமோகனின் வாசகர்களுக்கு அது போதும்; ஜெயமோகனுக்குப் போதாது. ஜெயமோகனின் வாதம் வேறு மாதிரியாக இருக்கிறது. அது என் கருத்திலிருந்தும், ‘What I talk about when I talk about Running’ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் முரகாமியின் கருத்திலிருந்தும் மாறுபடுகிறது.
எழுத்தாளர்களால் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ஜெ. சிந்தனை செய்வதைத் தவிர்க்ககூடிய எந்தப் பயிற்சிகளையும் அறிவியக்கவாதியால் செய்ய முடியாது. உலகின் பல எழுத்தாளர்கள் நடையர்களாக இருந்திருப்பதாகச் சொல்லி நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களை மேற்கோள் காட்டுகிறார். நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர்கள் மட்டுமல்ல; உலகமே நடையர்களாக நிறைந்திருந்தது. அன்றைய வாழ்க்கைமுறை அப்படி. நடப்பது அவர்களுக்கு உடற்பயிற்சியல்ல; வாழ்வின் அங்கமாகவே இருந்திருக்கின்றன.
சிந்தனைகள் தடைப்படுவதால் கடும் உடற்பயிற்சியை நிராகரிக்கும் ஜெ, தியானம் செய்பவராகவும் உள்ளார். தியானம் என்பதே சிந்தனைகளைக் கொல்லக்கூடிய மகத்தான செயல் என்பதை அவர் அறிந்திருப்பார். ஏனெனில், ஜெ ஒரு நாளுக்கு என்னைவிடப் பத்து நிமிடங்கள் கூடுதலாகத் தியானிக்கிறார். என்னைப் பொறுத்தவரைக் கண்மூடி சுவாசத்தைக் கவனிப்பது அசல் தியானம் என்றால் விளையாட்டு, உடற்பயிற்சி, இசை போன்ற எண்ணங்களை மறக்கடிக்கும் செயல்கள் அனைத்தும் தியானத்தைப் போலானதாகும். இவற்றைச் செய்ய ஒருவர் குற்றவுணர்வே கொள்ளத் தேவையில்லை. நாளுக்கு இரண்டு மணி நேரம் சிந்திக்காமல் இருப்பதால் ஒருவன் இழக்கப்போவது எதையுமில்லை; அடையப்போகும் அதிசயங்களை அவனே கண்டுணர வேண்டும்.
ஆச்சரியம் என்னவென்றால் 25 மைல் ஓடுவது போன்ற கடும் பயிற்சிக்கு மத்தியிலும் முரகாமியால் சிந்தனையைத் தடுக்க முடியவில்லை. ‘Running is a great activity to do while memorizing a speech. As, almost unconsciously, I move my legs, I line the word up in order in my mind. I measure the rhythm of the sentences, the way they’ll sound. With my mind elsewhere I’m able to run for a long while, keeping up the natural speed that doesn’t tire me out…’ என்று ஓரிடத்தில் எழுதுகிறார். ‘As long as I run, I don’t have to think about anything else’ என்று எழுதிய அதே முரகாமிதான் இதையும் எழுதியிருக்கிறார்.
எனக்கு உடற்பயிற்சியின்போது சிந்தனைகளே எட்டியதில்லை. ஸ்க்வாட் போன்ற கடும்பயிற்சிகளின்போதெல்லாம் யோசனைகளுக்கே இடமில்லை. என் உடற்பயிற்சிக்கூடத்தில் எந்நேரமும் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். எப்போதாவது முன்மாலை செல்லும்போது இசையின்றி அமைதியாக உடற்பயிற்சி செய்ய நேரும். அப்போதெல்லாம் நான் படித்த வாசகம் ஒன்று நினைவிற்கு வரும். ‘Exercising gives you a physical benefit. Exercising with a partner gives you a mental benefit. Exercising without listening to music gives you a Spiritual benefit.’
முரகாமி மதிய தூக்கத்தை நேசிப்பவர். உறக்க ஆய்வாளர்கள் சிலர்கூடப் பின்மாலை வரை செல்லாதபட்சத்தில் மதியத் துயிலில் பிரச்சனையில்லை என்கின்றனர். இருப்பினும் என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முரண்படும் நானே மாதத்தில் ஐந்து நாட்களாவது மதியத் தூக்கம் போட்டுவிடுவேன்; கட்டுப்படுத்தியாக வேண்டும். உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு உணவுமுறையும் முக்கியம்; உணவு உடலுக்குச் சென்று சேர்வது அதைவிட முக்கியம். அதற்கு ஒரே வழி அதிகம் தண்ணீர் குடிப்பது. இல்லையெனில் சாப்பிடுவதில் பெரும்பங்கு மலமாகக் கழிந்துவிடும். உடலுடன் உரையாடுபவர்களுக்குத் தெரியும், நீர் தாகம் காலை எடுக்காது. போதிய உழைப்பையும் உணவையும் உடலுக்குக் கொடுத்தால் மட்டுமே தாகம் தலைதூக்கும். நான் மதிய நேரத்தில் அதிகம் சாப்பிடுபவன். முக்கியப் புரதச் சத்தை அவ்வேளையில்தான் எடுப்பேன். இரண்டு மணிக்கு உணவை முடித்தால் மூன்று மணியிலிருந்து இரவு தூங்கச் செல்லும்வரை தாகம் தீர்ந்தபாடிருக்காது. இருக்கையில் அமர்ந்தபடியே வேலை செய்தாலும் அவ்வளவு தாகம் எடுக்கும். இந்நிலையில், மதியத் துயில் கொண்டால் அந்நாளில் என் உடலுக்குத் தேவையான நீரில் பாதி கிடைக்காமல் போய்விடுகிறது.
முரகாமியிடம் இன்னொரு முரணும் இருக்கிறது. Competitiveness குறித்து அவர் காட்டும் அலட்சியம். அது தனிப்பட்ட தேர்வாயினும் சில முட்டாள் வாசகர்கள் Influence ஆகிவிடக்கூடாது என்பதால் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டுக்கும் போட்டிக்குமான வித்தியாசத்தைத் தெளிவாக அறிந்திருக்கும் வரை Competitiveness ஒருவனை மேம்படுத்தத்தான் செய்யும்.
துயரத்திலிருந்தும் வலியிலிருந்தும் மட்டுமே தூயக் கலைகள் பிறக்கும் எனப் பிதற்றிக்கொண்டிருக்கும் மூடர்களுக்கு மத்தியில், கலைஞன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியமென முன்னிலைப்படுத்துவதால்தான் முரகாமி தனித்துவமான எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.
*
‘In every interview I’m asked what's the important quality a novelist has to have. It’s pretty obvious talent. No matter how much enthusiasm and effort you put into writing, if you lack literary talent you can forget about being a novelist. This is more of a prerequisite than a necessary quality. If you don't have any fuel, even the best car won't run.
The problem with talent, though, is that in most cases the person involved can't control its amount or quality. You might find the amount isn't enough and you want to increase it, or you might try to be frugal to make it last longer, but in neither case do things work out that easily. Talent has a mind of its own and wells up when it wants to, and once it dries up, that's it. Of course certain poets and rock singers whose genius went out in a blaze of glory- people like Schubert and Mozart, whose dramatic early deaths turned them into legends - have a certain appeal, but for the vast majority of us this isn't the model we follow.
If I'm asked what the next most important quality is for a novelist, that's easy too: focus -- the ability to concentrate all your limited talents on whatever's critical at the moment. Without that you can't accomplish anything of value, while, if you can focus effectively, you'll be able to compensate for an erratic talent or even a shortage of it. I generally concentrate on work for three or four hours every morning. I sit at my desk and focus totally on what I'm writing. I don't see anything else, don't think about anything else. Even a novelist who has a lot of talent and a mind full of great new ideas probably can't write a thing if, for instance, he's suffering a lot of pain from a cavity. The pain blocks concentration. That's what I mean when I say that without focus can't accomplish anything.
After focus, the next most important thing for a novelist is, hands down, endurance. If you concentrate on writing three or four hours a day and feel tired after a week of this, you're not going to be able to write a long work. What's needed for a writer of fiction -- at least one who hopes to write a novel -- is the energy to focus every day for half a year, or a year, two years. You can compare it to breathing. If concentration is the process of just holding your breath, endurance is the art of slowly, quietly breathing at the same time you're storing air in your lungs. Unless you can find a balance between both, it'll be difficult to write novels professionally over a long time. Continuing to breathe while you hold your breath.
Fortunately, these two disciplines --- focus and endurance-are different from talent, since they can be acquired and sharpened through training. You'll naturally learn both concentration and endurance when you sit down every day at your desk and train yourself to focus on one point. This is a lot like the training of muscles I wrote about a moment ago. You have to continually transmit the object of your focus to your entire body, and make sure it thoroughly assimilates the information necessary for you to write every single day and concentrate on the work at hand. And gradually you'll expand the limits of what you're able to do. Almost imperceptibly you’ll make the bar rise. This involves the same process as jogging every day to strengthen your and develop a runner's physique. Add a stimulus keep it up. And repeat. Patience is a must in this process, but I guarantee the results will come.
In private correspondence the great mystery writer Raymond Chandler once confessed that even if he didn't write anything, he made sure he sat down at his desk every single day and concentrated. I understand the purpose behind his doing this. This is the way Chandler gave himself the physical stamina a professional writer needs, quietly strengthening his willpower. This sort of daily training was indispensable to him.
Writing novels, to me, is basically a kind of manual labor. Writing itself is mental labor, but finishing an entire book is closer to manual labor. It doesn't involve heavy lifting, running fast, or leaping high. Most people, though, only see the surface reality of writing and think of writers as involved in quiet, intellectual work done in their study. If you have the strength to lift a coffee cup, they figure, you can write a novel. But once you try your hand at it, you soon find that it isn't as peaceful a job as it seems. The whole process - sitting at your desk, focusing your mind like a laser beam, imagining something out of a blank horizon, creating a story, selecting the right words, one by one, keeping the whole flow of the story on track--requires far more energy, over a long period, than most people ever imagine. You might not move your body around, but there's grueling dynamic labor going on inside you. Everybody uses their mind when they think. But a writer puts an outfit called narrative and thinks with his entire being; and for the novelist that process requires putting into play all your physical reserve, often to the point of overexertion.
Writers blessed with talent to spare go through this process unconsciously, in some cases oblivious to it. Especially when they're young, as long as they have a certain level of talent it's not so difficult for them to write a novel. They easily clear all kinds of hurdles. Being young means your whole body is filled with a natural vitality. Focus and endurance appear as needed, and you never need to seek them on your own. If you're young and talented, it's like you have wings.
In most cases, though, as youth fades, that sort of freeform vigor loses its natural vitality and brilliance. After you pass a certain age, things you were able to do easily aren't so easy anymore - just as a fastball pitcher's speed starts to slip away with time. Of course, it's possible for people as they mature to make up for a decline in natural talent. Like when a fastball pitcher transforms himself into a cleverer pitcher who relies on changeups. But there is a limit. And there definitely is a sense of loss.’
- Murakami, ‘What i talk about when I talk about Running’
Opmerkingen