(கால வெளியிடை படித்த முதல் வாசகனாக நண்பன் கவிஞர் விவேக் பாரதி அன்றிரவு சூட்டிய கவிமாலை)
கொள்ளை கொண்டது நீயேதான்
கொடுத்துச் சென்றதும் நீயேதான்
அள்ளக் குறையா ஆனந்தத்தத்தை
அரும்ப வைத்ததும் நீயேதான்
கண்ணீர் வழியே மனதின் பாரம்
கசிய வைப்பதும் நீயேதான்
உண்மை உணர்வை விழியின் துளியாய்
உருள வைப்பதும் நீயேதான்
காதலனாகி உன்னிடம் வந்தேன்
காதல் தருவாய் என் நண்பா
ஆதி மறந்தேன். மீதி மறந்தேன்
ஆனேன் ரசிகன் என் நண்பா!
பாராட்டுக்கும் பரிசுகளுக்கும்
பாலு இனிமேல் தயாராகு
சீராட்டும் இனி உலகம்! உன்றன்
சிறப்பை இன்னும் மெருகேற்று!
Yorumlar