மே 3, 2021
எனக்குப் பெரிதளவில் பிறந்தநாள் பரிசுகள் வந்ததில்லை. வீட்டில் எப்போதாவது தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். ஆனால் பிடித்த நபர்களிடமிருந்து பிரத்யேக பரிசுகளின் சுகத்தை நான் அனுபவித்ததேயில்லை. I’m not a Gift person. புத்தகங்கள் கொடுக்கும் வழக்கமுண்டு. ‘ஓகே கண்மனி’ படத்தில் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்: “என்ன கிஃப்டெல்லாம் வாங்கிக் கொடுக்கிற? கணக்கு தீக்குறியா?” எனக்கு யாராவது திடீரென்று பரிசு கொடுத்தால் எனக்கும் கொஞ்சம் அப்படித்தான் தோன்றும். ‘என்ன எதிர்பார்க்கிறாய்? எதற்காக இதெல்லாம்?’ இப்படித் தோன்றுவது கொஞ்சம் Unkindதான். அதற்கென அந்நபரின் மெனக்கெடலை நினைக்கத் தவறியதில்லை.
இன்று எனக்கு ஒரு பரிசு வந்தது. ‘Dear Writer… Dear Actress…’ புத்தகம். இதை வழக்கமான புத்தகப் பரிசென ஒதுக்கி வைத்துவிட முடியாது. 300 பக்கங்கள் கொண்ட காதல் கடிதம். நான் இப்புத்தகத்தைப் படிக்க எவ்வளவு ஆசைப்பட்டேன் என்பது பரிசளித்தவருக்கு மட்டும்தான் தெரியும். நான் வேலையில்லாமல் வீட்டிலிருந்த சமயத்தில்தான் இப்புத்தகத்தை இணையத்தில் கண்டுபிடித்தேன். இது இந்தியாவில் கிடைக்காது. இங்கிலாந்திலிருந்து வருவதற்கு ஒரு மாதமாவது ஆகும். இதன் விலை 10 யூரோ; இந்திய மதிப்பில் ரூ.800 முதல் 1,000 வரை (மாறிக்கொண்டே இருக்கும்). கையில் காசில்லாமல் தினமும் அமேசான் தளத்திற்குச் சென்று Cart-லிருக்கும் இப்புத்தகத்தை எவ்வளவு ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்! ஓர் எதிர்பாரா சமயத்தில் இப்புத்தகம் வீடு தேடி வந்தது. பிறந்தநாள் முடிந்த 5 நாட்களுக்குப் பிறகு புத்தகம் வந்ததில் பரிசளித்தவருக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனால் ஒரு சாதாரண நாளைச் சிறப்பானதாக மாற்றிய தந்திரத்தை அவர் அறிந்திருக்கவில்லை.
மே 8, 2021
‘The Conservatory’ - Guy de Maupassant
‘In the Dark’ - Anton Chekhov
இரண்டு சிறுகதைகளும் ஒன்று போலவே உள்ளன. செகாவ், மாப்பசானைத் தன் சிறுகதை ஆசானாகக் கருதியிருக்கிறார் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி கிடைத்திருக்கிறது. எனக்கு இவ்விரு சிறுகதைகளும் பிடிக்கவில்லை.
மே 9, 2021
‘நாம் இன்றிலிருந்து ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளலாமா?’ என்று சென்ற ஆண்டு கேட்டாள்.
‘எனக்குக் காதலிக்கத் தாய்மொழி தேவை’ என்றேன்.
‘சரி, தமிழிலேயே பேசிக்கொள்ளலாம். நீ அதிகம் என்னிடம்தானே பேசுகிறாய். உன் ஆங்கில உச்சரிப்பு மேம்படுமென்று யோசித்தேன்’ என்றாள்.
ஒருவேளை நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசிக் காதலித்திருந்தால் எங்கள் உறவு முடிந்திருக்காதெனத் தோன்றுகிறது!
மே 20, 2021
எம்.வி.வெங்கட்ராம் பிறந்தநாள் அன்று அலுவலக வேலையில் மீறல் புனைவு பற்றி எழுத நேர்ந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஜார்ஜ் பத்தாயின் ‘Story of the Eye’ நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது எனக்கு. அடுத்த நாளே வாசிக்கத் துவங்கினேன். நாவல் ஆரம்பித்த முதல் வரியிலிருந்தே காமம், காமம், காமம்… ஒரு கட்டத்தில் அதையே படித்துப் படித்து அலுத்துவிடுகிறது. ‘Story of the Eye’ ஆழமாக எழுதப்பட்ட நாவலல்ல; மீறல் புனைவு என்ற காரணத்தால் ஜார்ஜ் பத்தாய் இதனைத் தன் பெயரில் வெளியிடவே தயங்கி புனைப்பெயரில் வெளியிட்டார். மீறல் புனைவு எழுதியதற்காக மார்க்கி டி சாத்துக்கு நடந்ததை நினைத்துப் பயந்திருப்பார் போலும். கலைஞர்களைக் கொண்டாடிய ஃப்ரென்ச் சமூகத்திலேயே மீறல் புனைவு எழுதுபவர்களின் நிலவரம் இதுதான். எம்.வி.வி மட்டும் தப்பிப் பிழைத்து ‘காதுகள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிவிட்டார்.
‘Story of the Eye’ நாவலின் ஒரு குறிப்பிட்ட பக்கம் மட்டும் என்னை மிகவும் ஈர்த்தது. கதையே த்ரீசம்மிலிருந்து (MFF) துவங்கிவிடுகிறது. அதில் ஒரு பெண் இறந்துவிடுகிறாள். மீதமுள்ள 2 பேரிடமும் விசாரிக்க ஒரு அதிகாரி கதையில் அறிமுகமாகிறார். அவர்களுடன் மிகச் சாதாரணமாக உரையாடி விசாரணையை மேற்கொள்கிறார். அப்போது அவர்கள் மூவரும் ஒரு தேவாலயத்திற்குச் செல்கின்றனர். அப்போது அந்த அதிகாரி, தட்டில் ஒரு கோப்பை வைத்து அதில் வைட் வைன் நிரப்பித் தருகிறார். அதனை நுகர்ந்த அப்பெண், ‘இதன் வாசம் விந்து போல் உள்ளது’ என்கிறாள். அதற்கு அவர், ‘ஆம், வைட் வைன் என்பது இயேசுவின் விந்திலிருந்து தயாரிக்கப்படுகிறது; அதேபோல் ரெட் வைன் என்பது இயேசுவின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது’ என்கிறார். இதுதான் மீறல் புனைவின் உச்சம்.
மே 21, 2021
PDFல் படிக்கும் பழக்கம் இல்லாததால் புத்தகங்களை முடிந்தளவு பிரதியாக வாங்கி படித்தவாறு இருக்கிறேன். ‘Story of the Eye’ பிரதியின் விலை கிட்டத்தட்ட ரூ. 800; புத்தகத்தின் மொத்த பக்கங்கள் என்னவோ 70தான். வெறும் 70 பக்கத்திற்கு 800 ரூபாயை எப்படிச் செலவிடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுஎனிபுக்ஸ் ஆப்பின் பைரேட்டட் காப்பி கிடைத்துவிட்டது. பெரும்பாலும் நான் படிக்க நினைக்கும் புத்தகங்களின் விலை இதுபோல அதிகமாகவே உள்ளன. காரணம், அவை டாலர் அல்லது யூரோவிலிருந்து இந்திய மதிப்பிற்கு மாற்றும்போது அதன் விலை கூடிவிடுகிறது. இப்படியே எல்லா புத்தகத்திற்கு ஆயிரக் கணக்கில் செலவிட்டுக்கொண்டிருக்க முடியாது. ஃபோனில்பைரேட்டட்காப்பியாகப்படிக்கப் பழக வேண்டும். இன்று நான் படிக்க நினைத்து எனிபுக்ஸ் ஆப்பில் பதிவிறக்கம் செய்த புத்தகங்களின் பட்டியல் :
My Secret Garden - Nancy Friday
A Woman’s Story - Annie Ernaux
Anton Chekhov - Bloom
The Mystery of Olga Chekhov - Antony Beevor
Raymond Carver Short stories
Women in Love - D.H.Lawrence
The unbearable lightness of being - D.H.Lawrence
The Sense of ending - Juliar Barnes
House of the sleeping Beauties - Yasunari Kawabata
Memoirs of Woman of Pleasure - John Cleland
Lolita - Nabakov
Love Poems - Pablo Neruda
Beauty & Sadness, The sound of the Mountain, Thousand Cranes, Snow Country - Hasunari Kawabata
Memories of My Melancholy Wholes - Gabriel Garcia Marquez
On Writing, On Love, Love is a dog from hell - Charles Bukowski
இந்த அனைத்து புத்தகங்களின் பிரதியையும் வாங்க வேண்டுமெனில் நான் ரூ. 16,000 செலவழிக்க வேண்டியிருக்கும்.
மே 26, 2021
‘அன்பின் பாலே’ சிறுகதை குறித்து அழைத்து விவாதித்தார் அருண் பாண்டியன். அவருக்குச் சிறுகதை பிடித்திருந்தாலும் சில சிக்கலைக் கண்டிருக்கிறார். குறிப்பாக, “I’m not at the age of exploring all your sexual Fantasies. To be frank, I’m bored of it”. இந்த வசனம் அவருக்குப் பிரச்சனைக்குரியதாகப் பட்டிருக்கிறது. பெண்களின் காமம் என்பது வயதிற்கு உட்பட்டதில்லை என்ற அவரது வாதத்தை நான் முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம், என் கதையில் அவர் கண்டடைந்த சிக்கலை என்னால் மறுக்கவும் முடியாது. கதை, வாசகர்களுக்கு எப்படியெல்லாம் சென்றடைகிறதோ அதற்கு முழு பொறுப்பும் ஆசிரியன்தான். ஆனால் அந்த வசனம், கட்டாயப்படுத்தப்பட்ட வாய்ப்புணர்தலுக்கு எதிரான நோக்கத்துடன் எழுதப்பட்ட என் வாதத்தைச் சொன்னேன். ஆரோக்கியமாக உரையாடலாக அந்த அழைப்பு இருந்தது.
நான் பதிவிட்ட ஒரே காரணத்திற்காக அவர் ‘வேள்வித் தீ’ நாவலை வாங்கியிருக்கிறார். அவர் பரிந்துரைத்த ஒரே காரணத்திற்காக ‘அறுவடை’ நாவலை நான் வாங்கியுள்ளேன்.
Comments