top of page
Search
Writer's pictureBalu

ஆண் மீதான பொய்ப் பழி

Updated: Mar 27, 2023

டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ காலத்திலிருந்து இன்று வரை திருமண உறவு எவ்வளவோ மாறிவிட்டது. மாற்றானைக் காதலித்து அதனால் ஏற்பட்ட chaos காரணமாகக் குற்றவுணர்வில் தற்கொலை செய்துகொண்ட அன்னாவின் காலம் முடிந்துவிட்டது. மனைவி செய்த தவற்றுக்காகக் கணவன் தற்கொலை செய்யும் காலத்திற்கு வந்துவிட்டோம்.
பைஜூவின் இந்தத் தற்கொலை பல ஆண்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில், அதற்குக் காரணமாக இருந்த மனைவி பிரியாவோ அல்லது அவளின் காதலனோ குற்றவாளி அல்ல; இதே பெண்ணுக்கு நடந்திருந்தால் பைஜூ குற்றவாளியாக்கப்பட்டிருப்பார். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கும்.

இந்தியத் திருமண முறையால் தங்களுக்கு எந்த நன்மையும் இல்லை எனத் தெரிந்தும் அதற்கு ஏங்குவோர் ஆண்களாகவும், அது அளிக்கக்கூடிய எல்லா சலுகைகளை அறிந்தும் அதிலிருந்து விலக எத்தனிக்கும் பெண்களும் அதிகளவில் இருப்பது எவ்வளவு அற்புதமான முரண்!

பைஜூ சந்தித்தது காமத்தின் துரோகம் மட்டுமல்ல; வன்முறை பிரயோகம் எனும் பொய்ப் பழியும்கூட. இருவரின் குடும்பங்களுக்குள் பணப் பிரச்சனைகள் இருந்துள்ளன. மனைவியின் நடத்தையைக் கண்டித்ததற்காகவே எல்லாப் பழிகளும் பைஜூ மீது வந்து விழுந்திருக்கின்றன. கோபிகிருஷ்ணனின் ஆவணம் நினைவுக்கு வருகிறது. மனைவி ஒரு டாக்டருடன் கணவனின் கண் முன்பே கலவி கொள்கிறாள். கணவன் கண்டித்ததற்கு மனைவி சொல்கிறாள் : “எனக்கு அவனை புடிச்சிருக்கு. அவன் இங்கே வருவான். நீ ஒத்துக்கிட்டா ஊர்ல புருஷன்ங்கிற நல்ல பேராவது மிஞ்சும். இல்லைன்னா 4 பேரைவிட்டு அடிக்கச் சொல்லி உனக்கு பைத்தியம்னு சர்டிஃபிகேட் கொடுத்து மென்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு நாங்க ஜாலிய இருப்போம். உனக்கு உன் சொத்துகூட கிடைக்காது”

இந்தியாவில் பதியப்படும் 40% பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் Domestic Violence வழக்குகள் போலியானவை என சமீபத்தில் அரசு தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகியிருந்தது. அதாவது புகாரளிப்போரில் 10ல் 4 பெண்கள் சமூகத்தில் தங்களுக்கு உள்ள சலுகையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள ஒரு பெண்ணுடன் எனக்குப் பழக்கமுண்டு. அவருடன் பெரும்பாலும் குடும்ப நல வழக்குகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வதிலேயே ஆர்வம் காட்டுவேன். சந்தேகமே இல்லாமல், சென்னையில் விவாகரத்தை முன்னெடுக்கும் 90% பேர் பெண்களாக உள்ளனர். விவாகரத்துக்கான காரணம் கேட்டபோது, முக்கால்வாசி மாற்று உறவு வழக்குகளாக இருப்பதாகச் சொன்னார். சென்னை போன்ற நகரத்தில் Domestic Violence, வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகக் குறைவாக வருவதாகவே கூறினார். பெரும்பாலும் பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்வதற்கு இரண்டே காரணங்கள்தான் உள்ளன.

- வேறு ஓர் ஆணுடன் இருக்கும் கள்ள உறவு. அந்த ஆணுக்காகக் கணவனையே துறக்கும் துணிவு.
- கணவனுடனான பாலியல் வாழ்க்கையில் திருப்தியின்மை.

இதைத் தொடர்ந்து அவர் சொன்ன சில கதைகளைக் கேட்டதும் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். ஆபாசப் படங்களின் நுகர்வு திருமண உறவினை சிதைக்கிறது. அதிலும், பெண்கள் ஆபாசப் படங்களை நுகர்வது அவர்களை யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளுக்குள் தள்ளுகிறது. விவாகரத்து கோரிய ஒரு பெண், “அவர் பண்ணும்போது எனக்கு டீப்பா போகல, மேம்” என்று சொல்லியிருக்கிறாள். பதிலுக்கு வழக்கறிஞர் பெண், “டீப்னா என்னம்மா?” என்று கேட்க, மனைவி உடனடியாக ஆபாசத் தளத்தைத் திறந்து “பாருங்க மேம். இதுல எவ்ளோ ஆழமா போகுது. இந்த மாதிரி அவர் பண்ண மாட்டிங்கிறாரு” என்று புலம்பியிருக்கிறார். அலுவலகமே சிரித்திருக்கிறது.

இன்னொரு பெண் கலவிக்கு முன் தன் கணவனுடன் சேர்ந்து ஆபாசங்களைப் பார்த்திருக்கிறார். இருவரும் தங்கள் முன் விளையாட்டுக்களைத் தொடங்கியுள்ளனர். உடனே யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. சென்று பார்த்தால் மாமியார். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திரும்ப வந்து பார்த்தால் கணவனுக்கு விறைப்புத்தன்மை இல்லையாம். இதனால் அவரை ஆண்மையற்றவன் என்று இவராகவே முன்முடிவுக்கு வந்து மாற்றானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். “தோ பாரும்மா, முதல்ல ஒரு ஆம்பளைய பார்த்து நீ ஆம்பளையே இல்லைன்னு சொல்றது ரொம்ப தப்பு. இன்னொன்னு, அப்படி யாராவது திடீர்னு கதவைத் தட்டும்போது பதட்டத்துல எரெக்‌ஷன் போகத்தான் செய்யும். டைம் கொடுக்கணும். ஆம்பளைங்களுக்குக் கொஞ்சம்கூட இதுல Empathy eh பார்க்க மாட்டீங்களா?” என்று வழக்கறிஞர் பெண் கேட்டிருக்கிறார். இப்படி ஏகப்பட்ட வழக்குகள் ஆபாசப் படங்களைச் சார்ந்து உள்ளன. ஆகவே, ஆண்கள் ஆபாசப் படங்களை நுகரக்கூடாது. மேலும், ஆபாசங்களை நுகரும் பெண்களைத் தங்கள் துணையாகத் தேர்ந்தெடுக்கக்கூடாது.

பைஜூவின் சம்பவத்திற்குப் பிறகு ஆண்களை ‘பாதிக்கப்பட்டோர்’ என்ற இடத்தில் வைப்பதைப் பார்க்க முடிகிறது. அது ஒருவகையில் உண்மையே என்றாலும் அதை முழுமனதாக நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது நமது உயிரியல் கூறுக்கு அப்பாற்பட்டது. காதல் அல்லது திருமண உறவுக்கான ஆட்ட விதிமுறைகளை ஆண்கள் பயில வேண்டும். பெண்களையும் காமத்தையும் குறைத்து மதிப்பிடுவது (Devaluing). உறவின் நித்தியத்துவத்திற்கான உத்தரவாதத்தை அளிக்காமல் இருப்பது போன்ற பல விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆஸ்கர் வைல்டின் ஒரு வாசகம் உண்டு. “How can a woman be expected to be happy with a man who insists on treating her as if she were a perfectly normal human being”
நேற்று சுப்புவைச் சந்தித்து இதுபற்றி குறைந்தது 3 மணி நேரமாவது உரையாடியிருப்பேன். அவனிடம் மீண்டும் மீண்டும் சொன்னது இதைத்தான். “Choose a wise woman rather than a woman you like/love”. உலகில் காதல் வேறு மாதிரியாகவும், திருமணம் வேறு மாதிரியாகவும் இயங்கும்போது நாம் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. நமக்குப் பிடித்த பெண்ணைவிட நமக்கு சரியான பெண்ணை மணப்பதே உயர்ந்தோர் செயலாகும். பெண்கள் இவ்விஷயத்தில் மிகச் சரியாகவே முடிவெடுக்கின்றனர். காரணம் அவர்கள் தங்கள் விருப்பத்தை எண்ணி குற்றவுணர்வு கொள்வதில்லை; அவர்களின் விருப்பத் தேர்வை (preference) சமூகமும் விமர்சிப்பதில்லை.

“அதிகம் பயணம் செய்யும், பணம் சம்பாதிக்கும் அறிவு சார் பெண்களைவிட, படிப்பறிவோ பகுத்தறிவோ இல்லாத குழந்தை வளர்ப்புக்குத் தயாராய் இருக்கும் கன்னிப் பெண்ணே ‘மனைவி’க்கான எனது விருப்பத் தேர்வாக இருப்பாள்” என்று சொன்னதற்கு ஒரு பெண் என்னிடம் கோபித்துக்கொண்டாள். ஆண்கள் தங்கள் விருப்பத் தேர்வுக்காக வெறுக்கப்படுகிறார்கள். நாம் வெறுக்கப்படுகிறோமா நேசிக்கப்படுகிறோமா என்பது முக்கியமே இல்லை; மதிக்கப்படுகிறோமா என்பதே முக்கியம்.



284 views0 comments

Recent Posts

See All

Comentarios


Post: Blog2_Post
bottom of page